ஸ்கெட்ச் ஓபிஎஸ்க்கு இல்லை..’அவருக்கு’ தான்! கொங்கில் ‘கழகத்துக்காக’ களமிறங்கிய ‘பவர்’ அமைச்சர்!
கோவை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அதிருப்தியில் இருக்கும் சில சீனியர்கள் தற்போது திமுக தரப்புக்கு தாவி இருக்கும் நிலையில் கோவை ஈரோடு நாமக்கல் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகளை திமுகவுக்கு கொண்டு சேர்க்கும் வேலையை முக்கிய அமைச்சர் ஒருவர் மேற்கொண்டு இருப்பதாக கூறுகின்றனர் கொங்கு மண்டல அதிமுகவினர்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து அணிகளுக்கு தாவி வருகின்றனர்.
கடந்த காலங்களில் எடப்பாடி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் நிர்வாகிகள் சென்று வருவது சகஜமாக இருந்தது. தற்போது அணி தாவாமல் கட்சி தாவி வருகின்றனர்.

அணி தாவும் படலம்
இடையே சில நிகழ்வுகள் இரு தரப்புக்கும் எதிராக நடைபெற்றதால் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் தங்களும் அவருடன் பயணித்தால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை உணர்ந்துள்ள ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் எடப்பாடி பக்கம் தாவ தொடங்கினர். அந்த வகையில் மாபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதம், கேபி முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர்.

கட்சி தாவல்
ஓ.பன்னீர்செல்வத்தின் மிகத்தீவிர ஆதரவாளர்களாக பெங்களூர் புகழேந்தி, கோவை செல்வராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் அவருடனேயே இருந்து வந்தனர். அதிமுக ஓபிஎஸ் தரப்பில் பிரச்சார பிரங்கியாக கருதப்பட்ட கோவை செல்வராஜ் திடீரென திமுக தரப்புக்கு தாவினர். எடப்பாடியை மிகக் கடுமையாக விமர்சித்ததால் ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்தால் கூட தன்னால் அதிமுகவில் பயணம் செய்ய முடியாது என கருதிய அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மூலம் திமுகவில் இணைந்து விட்டார் இதற்குப் பின்னணியில் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும் தற்போது திமுகவில் பயணிப்பவருமான ஆறுகுட்டி இருக்கிறார்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ் திமுகவில் தான் இணைய போகிறார் என்பது குறித்த தகவல்களை கசிய விட்டவரும் அவரே. இந்த நிலையில் தற்போது நாமக்கல் தங்கமணி கோவை வேலுமணி உள்ளிட்ட இரு முக்கிய நிர்வாகிகள் கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தரும் மிக முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். ஏற்கனவே எஸ்பி வேலுமணிக்கு எதிராக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ் திடீரென திமுகவுக்கு சென்று விட்ட நிலையில் கொங்கில் அரசியல் செய்ய முடியாத நிலைமை ஓ.பன்னீர் செல்வத்துக்கு இருக்கிறது.

எடப்பாடிக்கு நெருக்கடி
இதேபோன்று எடப்பாடி பழனிச்சாமியையும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டுமென திட்டமிட்டு இருக்கும் அதிமுகவில் இருந்து தற்போது திமுகவில் இணைந்திருக்கும் கோவை செல்வராஜ் முக்கிய அமைச்சரோடு சேர்ந்து பல திட்டங்களை தீட்டி வருகிறார். அந்த வகையில் கோவை நாமக்கல் ஈரோடு சேலம் உள்ளிட்ட பகுதிகளில் தனக்குத் தெரிந்த நிர்வாகிகளை திமுகவுக்கு அழைத்து வரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மாவட்ட அளவில் முக்கியமான நிர்வாகிகளை அமைச்சர் ஒருவரே நேரடியாக தொடர்பு கொண்டு திமுகவுக்கு வந்தால் உரிய பதவியும் மரியாதையும் அளிக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

ஓபிஎஸ் இபிஎஸ்
மேலும் அதிமுகவில் அதிகார மோதலால் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரில் யாராவது ஒருவர் தான் பலன் பெற முடியும். மற்றவர்கள் தொண்டர்களாகவே இருக்க வேண்டியதுதான். அதிகபட்சம் மாவட்ட செயலாளராக கூட பதவி தர மாட்டார்கள். அதே நேரத்தில் திமுகவுக்கு வரும்போது மாநில அளவிலான பதவிகள் கூட தேடி வரும் இதற்கு கடந்த காலங்களில் பல உதாரணங்கள் உண்டு. எனவே தற்போது அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வரும் பட்சத்தில் பதவிகளும் அளிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டு இருப்பதால் சில கொங்கு மண்டல நிர்வாகிகள் திமுகவுக்கு சென்று விடலாமா என யோசித்துள்ளனர்.

அடுத்த ட்விஸ்ட்
இந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கிடைத்திருக்கும் நிலையில் அவர்களை கண்காணிப்பதோடு சமாதானம் செய்யும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர் கொங்கு மண்டல ரத்தத்தின் ரத்தங்கள். வரும் காலங்களில் அடுத்தடுத்து கட்சி தாவும் படலங்கள் இருக்கலாம் எனவும் தற்போது சில முக்கிய நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இதனால் உற்சாகமடைந்துள்ள திமுக தரப்பு நாடாளுமன்றத்தில் கொங்கு மண்டலத்தில் பெரும் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. இதன் பின்னணியிலும் 'அந்த' அமைச்சர் இருக்கிறார் எனவும் தற்போதே கட்சி தயாராக இருக்கும் மாஜிக்களின் உத்தேச பட்டியலும் தயார் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் முக்கிய புள்ளிகள் திமுகவில் ஐக்கியமாவது உறுதி என்றும் அடித்துச் சொல்கின்றனர் கொங்கு மண்டல திமுக உடன் பிறப்புகள்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications