கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் வேலுமணிக்கு ரொம்ப நெருக்கம்! 68 பேரிடம் ஆட்டைய போட்ட அபூர்வ ‘ஆத்மா’! இப்போ என்னாச்சு?

Google Oneindia Tamil News

கோவை : அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் தனக்கு மிகவும் நெருக்கம் எனக் கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக 68 பேரிடம் ரூ.2.17 கோடி மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கவுண்டம்பாளையம்,லட்சுமி நகரை சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார். இவர் வ.உ.சி., பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார்.

வ.உ.சி., பிறந்தநாள், நினைவு நாள் வரும்போது கோவை மத்திய சிறையில் இருக்கும் செக்கிற்கு மாலை அணிவிக்க செல்வார்.

’ஆப்ரேசன் 10’ ரஜினி சொன்னதையே திரும்ப சொன்ன அமித் ஷா! காலியாகிறதா அதிமுக கூடாரம்? கலகலத்த கமலாலயம்! ’ஆப்ரேசன் 10’ ரஜினி சொன்னதையே திரும்ப சொன்ன அமித் ஷா! காலியாகிறதா அதிமுக கூடாரம்? கலகலத்த கமலாலயம்!

 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

இந்நிலையில் ஆத்மா சிவக்குமார் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஆகியோர் தனக்கு மிகவும் நெருக்கம் என்றும் அவர்களிடம் கூறி அரசு வேலை வாங்கித் தர முடியும் என்று கூறியும் பலரிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார்

68 பேரிடம் மோசடி

68 பேரிடம் மோசடி

வருவாய்த்துறை தோட்டக்கலைத்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 68 பேரிடம் 2கோடியே 17 லட்சம் ரூபாய் அவர் மோசடி செய்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மாரிசாமி என்பவர் ஆத்மா சிவகுமார் தன்னிடம் கிராம நிர்வாக அதிகாரி வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

கைது

கைது

மேலும், அவரிடம் ரூ 8 லட்சம் மோசடி செய்துவிட்டார் என்று கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் . புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பல மாதங்களாக தலைமறைவாக இருந்த ஆத்மா சிவக்குமாரை இன்று கைது செய்தனர்.அவரது உறவினர்கள் உள்ளிட்ட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

 ஆடம்பர வாழ்க்கை

ஆடம்பர வாழ்க்கை

இவர் மோசடி செய்த பணத்தில் இடையர்பாளையம் லூனா நகரில் அப்பார்ட்மெண்ட் கட்டி 7 வீடுகள் வாடகைக்கு கொடுத்திருப்பதாக விசாரணயில் தெரிய வந்தது. மேலும் மோசடி செய்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கையோடும் அவ்வப்போது அன்னதான நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்துள்ளார். தொடர்ந்து சிவக்குமாரால் ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியலை சேகரித்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
The police have arrested a man who defrauded 68 people of Rs 2.17 crore by claiming that he was close to Velumani, Udayakumar and former minister Ponnaiyan who were ministers during the AIADMK regime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X