அரைவேக்காடு அண்ணாமலை..! நானும் இருக்கேனு காட்டிக் கொள்ள பேசுகிறார்..! விளாசிய செந்தில் பாலாஜி!
கோவை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமான கருத்துகளை தொடர்ந்து கூறிவருகிறார் எனவும், நாங்களும் இருக்கிறோம் என்ற இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார் என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கோவையில் 113.21 கோடி ரூபாய் மதிப்பிலான நகர் நல மைய கட்டிடங்கள் மற்றும் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இதற்கான தொடக்கவிழா இன்று நடைபெற்றது.
இந்த பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
கோவை லாலி ரோடு சாலையில் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி," கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 1,131 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் 800 கோடி ரூபாய்க்கான பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

கோவை மாவட்டம்
இரண்டு மூன்று மாதங்களில் மீதமுள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகளும் முடிந்து விடும். அதற்கான பணிகளை மாவட்ட ஆட்சியர் விரிவுப்படுத்தி உள்ளார். மற்ற மாவட்டங்களின் மாநகராட்சியை விட அனைத்து திட்டங்களையும் பெற்ற மாவட்டமாக கோவை மாவட்டம் தி.மு.க ஆட்சியில் இருக்கும்.

பாஜக அண்ணாமலை
தமிழ்நாட்டின் தலைநகராக சென்னை இருப்பினும், தமிழ்நாட்டில் தொழில் துறையின் தலைநகராக கோவை இருக்கிறது. அண்ணாமலை அரைவேக்காட்டுத்தனமான கருத்துக்களை தொடர்ந்து கூறிவருகிறார். நாங்களும் இருக்கிறோம் என்ற இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார்.
Recommended Video

அவதூறு பரப்புகிறார்
மக்களுக்கு தேவையான திட்டங்களை அரசிடம் கொண்டு வந்து சேர்க்கும் அரசிற்கு எடுத்துக்காட்டான பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் மீது அவதூறு பரப்புகிறார்" என பேசினார். தமிழக அமைச்சர்கள் இருவரின் ஊழல் பட்டியல் குறித்து வெளியிடப்போவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அதற்கு திமுக அமைச்சர்கள் கடுமையாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications