ஓகே சொன்னால் தான் நிலம் கையகப்படுத்தப்படும்! அமைச்சர் சொன்ன ஆறுதல் தகவல்! விவசாயிகள் மகிழ்ச்சி!
கோவை : சிப்காட் போன்ற தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு விவசாயிகளின் ஒப்புதல் இன்றி விவசாயிகள் முன்வந்து கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும், அரசு நிலங்களை கையகப்படுத்த மாட்டாது.. முதல்வரின் நிலைப்பாடும் அதுதான் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ள 6 கிராமங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் சிப்காட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 3,731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.
சிப்காட் அமைவதற்கு 6 கிராம பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வாகன பேரணி உண்ணாவிரத போராட்டம், கடையடைப்பு, நடைபயணம் என பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர்.

மக்கள் போராட்டம்
இதனையடுத்து விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டாலும் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், தனியாருக்கு சொந்தமான 815 ஏக்கரில் மட்டுமே தொழில் பூங்காஅமைக்கப்படும் என நீலகிரி எம்.பி ஆ.ராசா விவசாயிகளிடம் நேரில் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிலம் கையகப்படுத்த முயன்றால் தங்களது போராட்டம் மீண்டும் தொடரும் என போராட்டக்குழுவினர் எச்சரித்துள்ளனர்.

சிப்காட்
இந்நிலையில் சிப்காட் போன்ற தொழில் பூங்காக்கள் அமைப்பதற்கு விவசாயிகளின் ஒப்புதல் இன்றி விவசாயிகள் முன்வந்து கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே நிலங்கள் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழில் பேட்டை மேம்பாட்டு பணிகள் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

தா.மோ அன்பரசன்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் அன்பரசன், "கிட்டாம்பாளையத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்காக 316 ஏக்கர் கடந்த 2006 ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக, ஆசியாவில் மிகப்பெரிய தொழிற்பேட்டை அமைப்பதற்காக, கலைஞரின் வேண்டுகோளுக்கிணங்க திட்டமானது செயல்படுத்தப்பட்டது. அதிமுக பொறுப்பேற்ற பிறகு இத்திட்டமானது 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
இத்திட்டமானது கிடப்பில் போடப்பட்ட நிலையில் இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன்பாக கருமத்தம்பட்டி பகுதியில் நேரில் ஆய்வு செய்து சாலைகள் அமைப்பது, குடிநீர் தொட்டிகள் அமைப்பது, அலுவலக கட்டிடங்கள் ஆகியவை மேம்படுத்துவதற்காக 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாயும், பயனாளிகளின் தரப்பில் 14 கோடி ரூபாயும் மதிப்பீடு போடப்பட்டு செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அரசு கையகப்படுத்தாது
இன்னும் நான்கு அல்லது ஆறு மாத காலத்தில் இவைகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டு, வருகின்ற ஒரு வருடத்தில் தொழிற்பேட்டை பயன்பாட்டிற்கு வரும், 50,000 பேர் இதில் வேலை வாய்ப்பு பெறுவார்கள், அன்னூர் பகுதியில் விவசாயிகளின் ஒப்புதலோடு தான் நிலம் கையகப்படுத்தப்படும். மின்சார கட்டணம் 10 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 10% குறைக்கப்பட்டுள்ளது. வாரப்பட்டி பகுதியில் விவசாயிகள் போராடி வருகின்ற, ராணுவ தளவாடங்கள் தொழில் பூங்கா அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதலில் ஏற்கனவே நிலம் ஆய்வுகள் செய்யப்பட்டு விட்டது. புதிதாக எந்த நிலமும் கையகப்படுத்தப்பட மாட்டாது. விவசாயிகளின் ஒப்புதல் என்று தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலங்களை அரசு கையகப்படுத்தாது" என தெரிவித்தார்.
-
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications