பிரதமர் மோடி உரை LIVE: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பான பிரதமர் மோடி உரை நிறைவு!

Live
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்றைய தினம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது. இந்த மசோதா நிறைவேறத் தேவையான 3ல் இரு பங்கு ஆதரவு கிடைக்காத நிலையில், இந்த மசோதா தோல்வி அடைந்தது. இது தொடர்பாகப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

மத்திய அரசு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர முயன்றது. அத்தோடு தொகுதி மறுசீரமைப்பு மசோதாவையும் சேர்த்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இருப்பினும், அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது. லோக்சபாவில் போதிய வாக்குகள் கிடைக்காததால் அந்த மசோதா தோல்வி அடைந்தது.

PM Narendra Modi to Address Nation Today

Apr 18, 2026, 9:22 pm IST

காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்ந்து எங்கள் முயற்சியை நாடாளுமன்றத்தில் அனைவர் முன்னிலையிலும் கருக்கலைப்பு செய்துவிட்டன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் திமுக ஆகிய கட்சிகள்தான் இதற்குப் பொறுப்பு... இந்தத் தேசத்தின் பெண் சக்திக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு இவர்கள்தான் குற்றவாளிகள்- பிரதமர் மோடி
Apr 18, 2026, 9:06 pm IST

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இவர்கள் எதிர்ப்பதற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.. வாரிசு அரசியல் கட்சிகளின் பயமே அதற்கு காரணம். பெண்களுக்கு அதிகாரம் கிடைத்தால், தங்கள் வாரிசு அரசியலின் தலைமைக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். தங்கள் குடும்பத்தைத் தாண்டி வெளியே இருக்கும் பெண்கள் முன்னேறி வருவதை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்- பிரதமர் மோடி
Apr 18, 2026, 9:06 pm IST

மகளிர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஒரே மாதிரியான சாக்குகளைத்தான் சொல்லி வருகின்றன. ஏதோ ஒரு காரணத்தை சொல்லி, பெண்களின் உரிமைகளை இவர்கள் திருடி வந்துள்ளனர். இவர்களின் இந்த அருவருப்பான அரசியல் முறையையும், இதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தையும் இந்த நாடு இப்போது புரிந்து கொண்டுள்ளது - பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:57 pm IST

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காங்கிரஸ் தனது இருப்பையே இழந்துவிட்டது. ஒரு ஒட்டுண்ணியைப் போல, பிராந்தியக் கட்சிகளின் முதுகில் ஏறிச் சவாரி செய்து காங்கிரஸ் தன்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது. ஆனால் பிராந்தியக் கட்சிகள் கூட வலிமை பெறுவதை கூட காங்கிரஸ் விரும்புவதில்லை. எனவேதான், இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்க்க வைப்பதன் மூலம் பல பிராந்தியக் கட்சிகளின் எதிர்காலத்தையே பின்னுக்குத் தள்ளும் ஒரு அரசியல் சதியை அது தீட்டியுள்ளது- பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:54 pm IST

தனிப்பட்ட முறையில், காங்கிரஸ் கட்சி தனது பல ஆண்டு தவறைத் திருத்திக்கொள்ளும் என்றும், தனது பாவங்களுக்குப் பரிகாரம் தேடிக்கொள்ளும் என்றும் நான் நம்பினேன். ஆனால், வரலாற்றைப் படைப்பதற்கும் பெண்களின் ஆதரவாக நிற்பதற்கும் கிடைத்த வாய்ப்பை காங்கிரஸ் இழந்துவிட்டது- பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:52 pm IST

இது ஒவ்வொரு பெண்ணின் இதயத்திலும் எப்போதும் நிலைத்திருக்கும். இந்த தலைவர்களை பார்க்கும்போது எல்லாம் தங்களின் இட ஒதுக்கீட்டைத் தடுத்து நிறுத்திவிட்டுக் கொண்டாடியவர்கள் இவர்கள்தான் என்பதை நினைவு கூர்வார்கள்- பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:52 pm IST

பெண்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள்... இது பெண்களின் சுயமரியாதை மற்றும் கௌரவத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். பெண்கள் எதை வேண்டுமானாலும் மறந்துவிடுவார்கள், ஆனால் தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்- பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:48 pm IST

நாட்டின் நலனே எங்களது முன்னுரிமை. ஆனால், சிலருக்கு நாட்டின் நலனை விட தங்களின் அரசியல் ஆதாயம் மட்டுமே பெரிதாகத் தெரியும்போது, அதன் சுமையை இந்த நாட்டுப் பெண்கள்தான் சுமக்க வேண்டியிருக்கிறது. இந்த முறையும் அதுதான் நடந்திருக்கிறது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி போன்ற கட்சிகளின் சுயநல அரசியலால் ஏற்பட்ட சுமையை, இந்த நாட்டின் பெண் சக்தி சுமக்க வேண்டியதாகிவிட்டது - பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:42 pm IST

திமுக, காங்கிரஸ் திரிணாமுல் காங்கிரஸ் சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் மசோதாவை தடுத்துவிட்டனர்.. மசோதா தோல்வி அடைந்த நிலையில், அதை இந்த கட்சிகள் கொண்டாடினர்.. இதன் விளைவுகளை காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை எதிர்காலத்தில் சந்திக்கும். மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதியை அவர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்- பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:42 pm IST

"இன்று நான் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி, குறிப்பாக இந்த நாட்டுப் பெண்களுக்காகப் பேச வந்துள்ளேன். பெண்களின் முன்னேற்றம் எவ்வாறு தடைப்பட்டுள்ளது என்பதை இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்... எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நாங்கள் வெற்றி பெறவில்லை. பெண் சக்தி சட்ட மசோதாவில் திருத்தங்களைச் செய்ய முடியவில்லை. இதற்காக நாட்டின் அனைத்துத் தாய்மார்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்"- பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:41 pm IST

எங்களின் மிகச்சிறந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நசுக்கப்பட்டு விட்டது – பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:41 pm IST

அனைத்து தாய்மார்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் – மோடி
Apr 18, 2026, 8:41 pm IST

ஒட்டுமொத்த நாடும் சோகத்தில் உள்ளதை என்னால் உணர முடிகிறது – மோடி
Apr 18, 2026, 8:41 pm IST

தேச நலனை விட அரசியலே எதிர்க்கட்சிகளுக்கு பெரிதாக உள்ளது – மோடி
Apr 18, 2026, 8:41 pm IST

எதிர்க்கட்சிகள் பெண்களின் முன்னேற்றத்தை விரும்பவில்லை – மோடி
Apr 18, 2026, 8:41 pm IST

பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுக – காங்கிரஸ் கொண்டாடி வருகிறது – மோடி
Apr 18, 2026, 8:41 pm IST

லோக்சபாவில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உரை
Apr 18, 2026, 8:38 pm IST

மசோதா நிறைவேற்றப்படாததற்கு நாட்டுப் பெண்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்- பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:38 pm IST

மகளிர் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற கனவை எதிர்க்கட்சிகள் தடுத்துள்ளன- பிரதமர் மோடி
Apr 18, 2026, 8:25 pm IST

இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.
Apr 18, 2026, 8:16 pm IST

மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு பதிவான வாக்குகள்

லோக்சபா மொத்த எம்பிக்கள்: 543

அவைக்கு வருகை தந்தவர்கள்: 489

ஆதரவாக விழுந்த வாக்குகள் (Ayes): 298

எதிராக விழுந்த வாக்குகள் (Noes): 230

வாக்கெடுப்பைப் புறக்கணித்தவர்கள்: 0 தேவைப்பட்ட வாக்குகள்: 326
Apr 18, 2026, 8:08 pm IST

மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான அரசியல் சாசன (131வது திருத்த) மசோதா, 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2026 நேற்று நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. அது தொடர்பாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+