வெற்றிலை + மிளகு சேர்த்தா என்னாகும் தெரியுமா? 8 வாரத்தில் உடலில் பெரிய மாற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிலை என்பது வெறும் தாம்பூலத்திற்கு மட்டுமானது அல்ல, அது மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு இயற்கை பொக்கிஷம்.. பழங்காலம் முதலே செரிமானத்திற்காகவும், கிருமி நாசினியாகவும் நமது முன்னோர்கள் இதனை பயன்படுத்தி வந்துள்ளனர்.. வெற்றிலையில் அடங்கியுள்ள அரிய சத்துக்கள் மற்றும் அதன் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே சுருக்கமாக காண்போம்..

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன.. இது மிகச்சிறந்த செரிமான ஊக்கியாக செயல்படுகிறது.

Betel leaves

சாப்பிட்ட பிறகு ஒரு வெற்றிலையை மென்று உண்பது, உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமானத்தை தூண்டுகிறது.. மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெற்றிலை ஒரு சிறந்த தீர்வாகும்.. வெற்றிலையை நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை பருகி வந்தால் வயிற்று உப்புசம் மற்றும் செரிமான கோளாறுகள் உடனடியாக சரியாகும்..

நம்முடைய தமிழ் கலாசாரத்தில் தாம்பூலம் எனப்படும் வெற்றிலை, பாக்கு போடுவது தொன்று தொட்டே நிலவி வருகிறது.. தாம்பூலம் எப்படி சாப்பிட வேண்டும் என்பது சித்த மருத்துவத்திலும் சொல்லப்பட்டுள்ளது..

வெற்றிலை நன்மைகள் என்னென்ன

வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய் என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டுமாம்.. மூன்றாவதாய் ஊறும் நீர் அமிர்தம் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.. தாம்பூலம் போடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்புகள் உறுதி பெறும், வாய் நாற்றம் போகும், மலச்சிக்கல் நீங்கும் என்பதால் இதனை தவறவிடக்கூடாது..

அந்தவகையில் தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களிலும் இடம்பெறுவது வெற்றிலை மற்றும் பாக்குதான்.

வெற்றிலையை பொறுத்தவரை தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, நிகோடினிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன.. வெற்றிலைகள் உடலுக்கு வெப்பம் தரக்கூடியவை.. இது தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்கவும் உதவுகிறது.. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் என முக்கிய உறுப்புகளின் உறுதிக்கும், ஆரோக்கியத்துக்கும் இது வழிவகை செய்கிறது..

வெற்றிலை - நரம்பு மண்டலம் பலம்

நரம்பு மண்டலத்துக்கு பலம் தருவதால், வளரும் பிள்ளைகளுக்கு வெற்றிலை சாறு தருவார்கள்.. இதனால் அவர்களின் நினைவுத்திறன் அதிகரிக்கும்..

குறைவான கொழுப்பு மற்றும் மிதமான புரதம் உள்ளதால், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும் வெற்றிலையை பயன்படுத்தலாம்.. இளம் கொழுந்து வெற்றிலையுடன் 5 அல்லது 6 மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று தின்றால் உடல் எடை மெல்ல குறைய துவங்கும்.

அதேபோல வெறும் வயிற்றில் 8 வாரங்களுக்கு இப்படி செய்வதால் குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் நீங்கும்.. குழந்தைகளுக்கு சளி, இருமல் இருந்தால் ஒரே ஒரு வெற்றிலையில் 4 அல்லது 5 துளசி இலைகளை வைத்து கசக்கி பிழிந்து அந்த சாற்றினை தரலாம்.

சுவாச கோளாறுகளுக்கு மருந்து

சுவாசப்பாதை தொடர்பான பிரச்சனைகளுக்கு இது மிகச்சிறந்த மருந்தாகும்.. குறிப்பாக சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் வெற்றிலையை நெய்யில் வதக்கி மார்பில் பற்று போட்டால் நெஞ்சு சளி எளிதில் கரையும் என்பார்கள்.

சரும ஆரோக்கியத்திலும் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.. உடலில் ஏற்படும் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள், வீக்கங்கள் மற்றும் காயங்களுக்கு வெற்றிலை சாற்றை தடவினால் வலி குறையும்.. இது ஒரு சிறந்த கிருமி நாசினி என்பதால் தோலில் ஏற்படும் அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்றுக்களை நீக்குகிறது.

முகப்பரு பிரச்சனை இருப்பவர்கள் வெற்றிலை சாற்றை முகத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்து முகம் பொலிவு பெறும்.. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. குறிப்பாக மார்பக புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் ஆற்றல் வெற்றிலைக்கு உண்டு..

ஆண்மை குறைபாடு தீர்க்கும்

அவ்வளவு ஏன்? வெற்றிலைகளை அளவோடு சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடும் நீங்கும்.. ஆண்களின் வீரிய சக்தி அதிகரிக்க இரவில் தாம்பூலத்துடன் சாதிக்காய் சேர்க்க வேண்டும்.. இதில் சுண்ணாம்பு இருப்பதால் எலும்புகள் உறுதியடையும். வெற்றிலைகளை இடித்து அதன் சாற்றில் தேன் கலந்து சாப்பிடும்போது விறைப்பு பிரச்சனை நீங்குகிறது.

வெற்றிலையில் துளசி வேர்ப்பொடி சிறிது சேர்த்து சாப்பிடுவதால் ஆண்மை பெருக செய்கிறதாம்.. எனினும் மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்றே இதனை மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும்.. அதுவே சிறந்த ஆரோக்கியம் ஆகும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+