திமுகவினரை பார்த்தால் விடாதீர்கள்.. கோவை பொதுக்கூட்டத்தில் தமிழக மகளிருக்கு மோடி போட்ட கண்டிஷன்

Subscribe to Oneindia Tamil

கோவை: மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிராக திமுக எம்பிக்கள் நேற்று வாக்காளித்தனர். இந்நிலையில் தான் ''தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரிகளிடமும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். திமுகவினரை எங்கே பார்த்தாலும் அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள். பெண்களின் பிரதிநதித்துவத்தை ஏன் எதிர்த்தார்கள்? என்று கேள்வி கேளுங்கள். பொன்னான வாய்ப்பை தமிழ் பெண்களுக்கு ஏன் மறுத்தார்கள்? என்று கேள்வி கேளுங்கள். ஏப்ரல் 23ம் தேதி தெளிவான, பலமான செய்தியை திமுகவுக்கு அளிக்க வேண்டும்'' என்று கோவை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

நான் தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரிகளிடமும் கூறிக்கொள்கிறேன். திமுகவினரை எங்கே பார்த்தாலும் அவர்களிடம் கேள்வி எழுப்புகங்கள். பெண்களின் பிரதிநதித்துவத்தை ஏன் எதிர்த்தார்கள் என்று கேள்வி கேழுங்கள். பொன்னான வாய்ப்பை தமிழ் பெண்களுக்கு ஏன் மறுத்தார்கள் என்று கேள்வி எகேளங்கள். ஏப்ரல் 23ம் தேதி தெளிவான, பலமான செய்தியை திமுகவுக்கு அளிக்க வேண்டும்'' என்று சாடினார்.

PM Modi in Coimbatore

கோவை என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:

''புத்தாண்டு என்பது புதிய நம்பிக்கை. புதிய சக்தி. புதிய தொடக்கம். அந்த வரிசையில் தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது. தமிழக மக்கள் தெளிவான செய்தியை அளிக்கின்றனர். என்டிஏவுக்கான வெற்றி. திமுகவின் வெளியேற்றம் என்ற செய்தியை மக்கள் கூறுகின்றனர்.

கொங்கு நாட்டு மக்கள் குறிப்பாக கோவை மக்கள் கடும் உழைப்பாளிகள். பாசமான மக்களுக்கு சொந்தமான பூமி இது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எப்போதும் உறுதியாக ஆதரவு அளித்து வந்துள்ளீர்கள். இதனால் நான் நான் எப்போது இங்கு வந்தாலும் உங்களில் ஒருவனாக உணர்கிறேன்.

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தோற்கடித்துள்ளது. இந்த மசோதா மட்டும் சட்டமாகி இருந்தால் சாதாரண பெண்கள் எம்பி, எம்எல்ஏக்களாகி ஆகியிருப்பார்கள். இந்த மசோதா வழியாக தமிழகத்துக்கு அதிக இருக்கைகள் கிடைக்க இருந்தது. ஆனால் இதை திமுக விரும்பவில்லை.

திமுகவின் செயல்கள் தெளிவாக அம்பலமாகிவிட்டது. கருப்பு உடைகள் அணிந்து திமுக தங்களின் தீய எண்ணங்களுக்கு திரை போட முடியாது. உங்களின் (திமுக) கெட்ட செயல்களின் பலன்களில் இருந்து இனி தப்பவே முடியாது. மக்கள் உங்களின் உண்மையான முகத்தை தெரிந்து கொண்டுவிட்டார்கள். பொய்களை பேசும் திமுகவால் இனி பொய்களை மறைக்க முடியாது.

தமிழர்களே உங்களுக்கு ஒன்றை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எங்கள் போராட்டம் முடிந்துவிடவில்லை. இது தொடக்கம் மட்டும் தான். பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் உங்களின் உரிமைக்காக போராடுவார்கள். இந்த நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு நான் நாட்டு மக்களுக்கு உரையாற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நிச்சயம் அதனை கேளுங்கள்.

இன்று பெருமையாக சொல்லிக்கொள்ள திமுகவிடம் சாதனை எதுவும் இல்லை. அதனால் தான் தமிழ்நாட்டின் இருக்கைகள் குறைப்பு பற்றி பொய்யான செய்தியை கூற தொடங்கி உள்ளனர். தற்போதைய விகிதாச்சாரத்தை தக்கவைக்க வேண்டும் என்று திமுக கூறியது. அப்படி தான் மசோதா முன்வைக்கப்பட்டது. ஆனால் இப்போது திமுக மாற்றி பேசி வருகிறது.

இதற்கு காரணம் இந்த ஒற்றை குடும்ப கட்சிகள் தங்களின் அதிகாரம் குடும்பத்துக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று நினைப்பது தான். தமிழ்நாட்டில் பெண்களாகட்டும், குழந்தைகளாகட்டும் குற்றவாளிகளால் பாதுகாப்பு இன்றி உள்ளனர். வன்முறை மற்றும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து திமுக தீங்கு இழைக்கிறது. நாடாளுமன்றத்திலும் திமுக பெண்களுக்கு ஆதரவாக இல்லை.

இந்த தேர்தலில் திமுகவுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். நான் தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதரிகளிடமும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். திமுகவினரை எங்கே பார்த்தாலும் அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள். பெண்களின் பிரதிநதித்துவத்தை ஏன் எதிர்த்தார்கள்? என்று கேள்வி கேளுங்கள். பொன்னான வாய்ப்பை தமிழ் பெண்களுக்கு ஏன் மறுத்தார்கள்? என்று கேள்வி கேளுங்கள். ஏப்ரல் 23ம் தேதி தெளிவான, பலமான செய்தியை திமுகவுக்கு அளிக்க வேண்டும்'' என்று சாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+