“கோவையில் ஆட்சி செய்தது அதிமுக தான்”.. பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய எடப்பாடி!
கோவை: "கோவை அதிமுகவின் கோட்டை.. திமுக ஆட்சியில் இருந்தாலும் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக தான். இந்த தேர்தலிலும் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்" என கோவையில் பிரதமர் மோடி பங்கேற்ற என்.டி.ஏ கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கோவையில் இன்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது. எதிர்வரும் தேர்தல் ஒரு குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்குமான தேர்தல். தமிழகத்தை சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் நடக்கும் தேர்தல். குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டும் தேர்தல். மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவோம்.
தீய சக்தி திமுக வேரோடு அழிக்கப்பட்ட வேண்டும் என அதிமுக தோற்றுவிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை மத்திய அரசின் உதவியால் கொண்டு வந்தோம். அதனால் அதிமுக ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி பெற்றது. என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்குகிறது.
இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் பிரதமர் மோடி. இந்தியாவை நிறைய பிரதமர்கள் ஆட்சி செய்தார்கள். ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு நாட்டிற்கு மிகப் பெரிய பெருமை கிடைக்கப் பெறச் செய்திருக்கிறார். பிரதமர் மோடி இரவு பகல் பாராமல் நாட்டின் வளர்ச்சிக்கு உழைக்கிறார்.
கோவை மாவட்டம் அதிமுக கோட்டை. 2021 தேர்தலில் கோவை
மாவட்டத்தின் 10 இடங்களிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. ஒரு இடம் கூட திமுக வெற்றி பெறவில்லை. திமுக ஆட்சியில் இருந்திருக்கலாம். ஆனால் கோவையில் ஆட்சி செய்தது அதிமுக கூட்டணி. 2026 தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்." எனப் பேசியுள்ளார்.
-
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications