கோவையில் தேசியக்கொடிகளை விரைந்து சென்று அகற்றிய போலீசார்.. விதி மீறலால் பரபரப்பு - என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கோவை : கோவையில் இந்து முன்னணி மற்றும் அதிமுக கொடி கம்பங்களில் கட்சிக் கொடிகளுக்கு கீழாக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் கட்சி கொடிகளுக்கு கீழ் கட்டப்பட்டிருந்த தேசியக்கொடிகளை அகற்றினர்.

75-வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்தவகையில், பல்வேறு இடங்களிலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். பல இடங்களில் தேசியக்கொடிக்கான விதிகளை மீறுவதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.

இல்லம் தோறும் தேசியக்கொடி

இல்லம் தோறும் தேசியக்கொடி

நமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை கொண்டாடும் வகையில் 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக 'இல்லம் தோறும் தேசியக்கொடி' என்ற செயல்பாட்டை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் சுதந்திர தினமான 15-ஆம் தேதி வரை 3 நாட்கள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் மூவர்ணக் கொடியை பறக்கச் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் மோடி அழைப்பு

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டப்படுவதையொட்டி, இந்திய மக்கள் அனைவரும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து வீடு, கடைகள், அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் காவல் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் இன்று முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்கும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை வீடுகளில் பறக்கவிடப்படும் தேசியக் கொடியை, இரவில் இறக்கத் தேவையில்லை. மூன்று நாட்களும் பறந்தவாறே இருக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

 வீடுகளில் மூவர்ணக் கொடி

வீடுகளில் மூவர்ணக் கொடி

இந்நிலையில், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கட்சிகளின் அலுவலகங்கள், பொதுமக்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றி வருகின்றனர். இதற்காக பொதுமக்களுக்கு மூவர்ணக் கொடி தடையில்லாமல் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றுமாறு பள்ளிகளில் மாணவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.

கட்சிகளும் அழைப்பு

கட்சிகளும் அழைப்பு

நாடு முழுவதும் பாஜக உள்ளிட்ட கட்சிகள், தங்கள் தொண்டர்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன. தமிழகத்தில் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், அவரவர் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நமது இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை எடுத்துக்கூறி நாட்டுப் பற்றையும், தேச ஒற்றுமையையும் வளர்க்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் அறிவித்திருந்தார்.

அதிமுகவினர்

அதிமுகவினர்

முன்னதாக, ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு அறிவுறுத்தியிருந்தார். அதன்படி அதிமுகவினர் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் அதிமுக கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடிக்குக் கீழே தேசியக்கொடி கட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கட்சி கொடிக்கு கீழே

கட்சி கொடிக்கு கீழே

இந்நிலையில், கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் இந்து முன்னணி மற்றும் அதிமுக கொடி கம்பங்களில் கட்சிக் கொடிகளுக்கு கீழாக தேசியக்கொடி கட்டப்பட்டிருந்தது. இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், கட்சி கொடிகளுக்கு கீழ் கட்டப்பட்டிருந்த தேசிய கொடிகளை அகற்றினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விதி

விதி

தேசியக் கொடிக்கு அருகில் அதைவிட உயரமாகவோ அல்லது இணையாகவோ எந்த ஒரு கொடியோ அல்லது கொடி போன்ற பொருளோ இடம்பெறக் கூடாது. தேசியக்கொடி பறக்கவிடப்படும் கம்பத்தின் உச்சியில் ஒரே சமயத்தில் மற்ற கொடி அல்லது கொடிகள் பறக்கவிடப்படக் கூடாது என்பது விதியாகும். அதனை மீறி கோவையில் கட்சிக் கொடிகளோடு தேசியக்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டதால் தான் அகற்றப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+