16 நிமிட "வீடியோ".. கோவை பெட்ரோல் பங்க்கில் நடந்த அக்கிரமம்.. 3 பேர் மீதும் பாய்ந்தது குண்டாஸ்
வீடியோ எடுத்த 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Recommended Video
கோவை: பெட்ரோல் பங்கில் பெண்கள் டிரஸ் மாற்றுவதை.. 16 நிமிடம் வீடியோ எடுத்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனியில் உள்ளது.
இந்த பங்கில் பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றுவதை செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளனர்.. அந்த வீடியோவில், டிரஸ் மாற்றும் பிரத்யேக அறையில் ஒவ்வொரு பெண் ஊழியர்களும் வந்து, வீட்டில் இருந்து அணிந்து வந்த டிரஸ்ஸை கழட்டிவிட்டு, பங்கில் அணியும் யூனிபார்மை போட்டு கொள்கிறார்கள்.

வைரல் வீடியோ
மொத்தம் 5 பெண்கள் டிரஸ் மாற்றி செல்லும் அந்த வீடியோவை செல்போனில் மறைத்து வைத்து எடுத்துள்ளனர்.. சில தினங்களுக்கு முன்பு இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடவடிக்கை
மொத்தம் 16 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது.. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் தரவும், சாய்பாபாகாலனி போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். பங்கில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர் சுபாஷ்தான் இந்த வீடியோவை எடுத்தது என தெரியவந்தது.

மணிகண்டன்
அந்த வீடியோக்களை, டெலிட் செய்வதாக சொல்லிவிட்டு தன் செல்போனுக்கு ஷேர் செய்து கொண்டவர் மணிகண்டன் என்னும் மற்றொரு ஊழியர்.. மேலும் இதனை தன் நண்பரான செய்தியாளர் மருதாச்சலத்துக்கு அனுப்பி வைக்க, அதை அவர் சோஷியல் மீடியாவில் பெண்களின் முகங்களை மறைக்காமல் அப்படியே பதிவிட்டுவிட்டார்.

வழக்கு பதிவு
போலீசாரின் இந்த விசாரணைகளுக்கு பிறகு சுபாஷ், மணிகண்டன், செய்தியாளர் மருதாச்சலம் ஆகிய 3 பேரும் கடந்த 8-ந் தேதி கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்பம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

குண்டர் சட்டம்
இந்த நிலையில் சுபாஷ், மருதாச்சலம், மணிகண்டன் ஆகிய 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து, 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலும் ஜெயிலில் உள்ள 3 பேரிடமும் வழங்கப்பட்டது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications