கோவை, திருப்பூரில் தொடங்கிய ஸ்டிரைக்.. இன்று முதல் 20 நாள் முடங்கும் ஜவுளி உற்பத்தி.. என்ன காரணம்?
கோவை: மின்கட்டண உயர்வு, மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று முதல் 20 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான உற்பத்தி பாதிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் அதிகளவில் ஜவுளி உற்பத்தி நடந்து வருகிறது. குறிப்பாக விசைத்தறிகள் மூலம் காலம் காலமாக ஏராளமானவர்கள் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 2 மாவட்டங்களிலும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. தினமும் ஒரு கோடி மீட்டர் அளவுக்கு காடா துணிகள் இங்கிருந்து உற்பத்தியாகி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் திருப்பூர், கோவை மாவட்டங்களில் சமீபகாலமாக விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் சுணக்கம் அடைந்துள்ளது. அதாவது மின் கட்டண உயர்வு, மூலப் பொருள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. அதோடு மார்க்கெட்டில் மந்தமான நிலை நிலவி வருகிறது. இதனால் போதிய வருமானமும் இல்லாத நிலை இருக்கிறது.
இதனால் விசைத்தறி தொழிலும், விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகளிடம் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் தான் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், மூலப்பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காடா துணி உற்பத்தி சார்ந்த சிறு குறு தொழில் நிறுவனத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் அடுத்த கட்டமாக திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று நவம்பர் 25ம் தேதி வரை 20 நாட்கள் ஜவுளி தொழில் உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தை தமிழ்நாடு தொழில்துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி இன்று ஜவுளி உற்பத்தி என்பது 2 மாவட்டங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் ரூ.50 கோடி மதிப்புக்கு ஜவுளி உற்பத்தி நடக்கிறது. தற்போதைய வேலை நிறுத்தத்தத்தால் தினமும் ரூ.50 கோடி ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தால் 20 நாட்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications