• search
கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

துர்நாற்றம்.. நேரத்தை வீணடிக்காதீர்கள்.. வானதி சீனிவாசனை வறுத்தெடுத்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

Google Oneindia Tamil News

கோவை: சமூக வலைத்தளம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இடையேயான மோதல்.

  Block செய்தும் கூட PTR-ஐ விடாமல் பேசிய Vanathi | PTR VS Vanathi

  சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கின்போது கோவா அமைச்சருக்கு அதிக நேரம் பேச அனுமதி கொடுத்துள்ளனர். பெரிய மாநிலம் என்ற அந்தஸ்தில் உள்ள தமிழகம், உ.பி., மகாராஷ்டிரா போன்றவற்றுக்கு கூட குறைந்த நேரம்தான் கிடைத்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை கூட்டத்தின்போதே பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக் காட்டியதாக தெரிகிறது.

  இதனால் கோவா அமைச்சர் அப்செட் ஆகிவிட்டாராம். ஆனால் சென்னையில் நேற்று முன்தினம் பேட்டியளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கோவா பெயரை குறிப்பிடாமல், மேற்கு கரையிலுள்ள ஒரு சிறு மாநிலத்தின் பிரதிநிதி 25 மடங்கு அதிகம் பேசினார். எனது அரசியல் வாழ்க்கையின் துயரம் அந்த பலனற்ற பேச்சை கேட்டது என்று தெரிவித்திருந்தார்.

  நிறுத்துங்கள்! நீங்கள் பிறவியிலேயே பொய்யரா?.. இல்லை உங்களுக்கு IQ குறைவா?.. வானதியை கண்டித்த பிடிஆர்நிறுத்துங்கள்! நீங்கள் பிறவியிலேயே பொய்யரா?.. இல்லை உங்களுக்கு IQ குறைவா?.. வானதியை கண்டித்த பிடிஆர்

  சிறிய மாநிலங்கள்

  சிறிய மாநிலங்கள்

  சிறு மாநிலங்களையும், பெரிய மாநிலங்களையும் ஒரே மாதிரி கருதக்கூடாது, ஒரே மாதிரி ஓட்டுக்கள் வைத்திருப்பது சரியல்ல என்பதற்கான நியாயப்பூர்வமான காரணங்களை அந்த பேட்டியில் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். சட்டசபை, லோக்சபாவில் எப்படி உறுப்பினர்களுக்கு பேச அனுமதிக்கப்படுகிறது என்ற உதாரணத்தையும் சுட்டிக் காட்டினார்.

  கோவாவுக்கு ஆதரவாக வானதி

  கோவாவுக்கு ஆதரவாக வானதி

  அதேநேரம், தமிழக உரிமைகளுக்காக நிதியமைச்சர் இப்படி வாதம் செய்தால், வானதி சீனிவாசனோ, கோவா மாநில அமைச்சருக்காக டுவிட்டரில் வக்காலத்து வாங்கினார். ஜிஎஸ்டி கவுன்சிலில் பழனிவேல் தியாகராஜன் கோவா அமைச்சரை இன்சல்ட் செய்துவிட்டார். இது ஜனநாயகத்திற்கே இழுக்கு.. என்று கோவா அமைச்சருக்கான பிரதிநிதி போல ஒரு கருத்தை வெளியிட்டார். அதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டுவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்துவிட்டார்.

  பொய்யர்

  பொய்யர்

  அவ்வளவுதான், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பதிலுக்கு வறுத்தெடுத்துவிட்டார். பொய் பேசுவதற்காக என்னை டேக் செய்ய வேண்டாம். ஏதாவது வேலை இருந்தால் போய் பாருங்க. நீங்கள் பொய்யரா, அல்லது அறிவு வளர்ச்சி குறைந்தவரா, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எப்படி ஒருவரை இன்சல்ட் செய்ய முடியும். பொறுங்கள். இந்த கேள்விக்கு பதில் அளிக்க வேண்டாம். நீங்கள் அறிவு வளர்ச்சி குறைந்த, பொய்யர். இவ்வாறு தெரிவித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வானதி சீனிவாசன் டுவிட்டர் கணக்கை பிளாக் செய்துவிட்டார்.

  விடாத வானதி

  விடாத வானதி

  ஆனால் பிளாக் செய்த பிறகும், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து டுவிட்டரில் பதிவிட்டார் வானதி. விமர்சனத்தை நிதியமைச்சரால் தாங்க முடியவில்லை என்பது சோகமாக இருக்கிறது. நீங்கள் என்னை அறிவு வளர்ச்சி குறைந்தவர், பொய்யர் எனக் கூறினாலும், உண்மை மாறாது. எச்.ராஜா, ஜக்கி வாசுதேவ் ஆகியோரை நீங்கள் செய்த கமெண்ட்டை வைத்து உங்கள் குணம் தெரிந்துவிட்டது என்று அவர்களையும் டேக் செய்து சொன்னார் வானதி.

  பதிலடி கொடுத்த பிடிஆர்

  பதிலடி கொடுத்த பிடிஆர்

  இதற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "இப்போதெல்லாம் பிணங்கள் விழவில்லை என்பதால் அரசியல் செய்யமுடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்" என்று, திமுக செய்தித் தொடர்பாளர் குறித்து பேசியவர்தான் நீங்கள். கெட்ட துர்நாற்றம் வீசும்போது, ஜன்னலை எந்த ஒரு மனிதனும் மூடி வைப்பான். அப்படி நினைத்துதான், நானும் உங்களை டுவிட்டரில் பிளாக் செய்தேன். உங்களிடமிருந்து நல்ல மனிதர் என்ற சான்றிதழ் வாங்குவது அர்த்தமற்றது. எனது நேரத்தை வீணாக்காதீர்கள். ப்ளீஸ். இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

  பிளாக் செய்தவர் வானதி

  பிளாக் செய்தவர் வானதி

  இப்படியாக, வானதி சீனிவாசன் ஏதாவது கூற வந்தால், பிடிஆர் பதிலடி கொடுப்பதால், டுவிட்டர் முழுக்க அனல் பறக்கிறது. இதனிடையே வானதி சீனிவாசன், ஏற்பாடு செய்திருந்த நீராவி பிடித்தல் சிகிச்சை முறையை விமர்சனம் செய்தவரை அவர் டுவிட்டரில் பிளாக் செய்திருந்தார். அதையும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக் காட்டியுள்ளார்.

  English summary
  Tamil Naud finace minister PTR Palanivel Thiagarajan slams Vanathi Srinivasan saying that, You once accused a fellow DMK spokesperson of being “unhappy that there weren’t more corpses to play politics with” I block you like a normal person closes a window to avoid a bad smell Getting a “good character” certificate from you’d be demeaning Don’t waste my time pls.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X