Sonஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது.. தமிழிசை சவுந்திரராஜன் மறைமுக தாக்கு
கோவை : Son ஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி பற்றி தெரியாது என புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழக முதல்வர் ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கோவை பொள்ளாச்சியை அடுத்துள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் அமைந்துள்ள ஆதி அமரநாயகி உடனமர்ந்த ஆதிசங்கரர் திருக்கோயிலின் குடமுழுக்கு விழா நடந்தது.

இந்த கோயிலில் நேற்று நடந்த ஒரு விழாவில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் தமிழுக்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை என்ற தோற்றம் உள்ளது. அதில் உண்மை கிடையாது. ஆன்மீகவாதிகள் மதிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள கோயில்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
கோயில் வருமானத்தை கோயில்களுக்கு செலவிட வேண்டும். கோயில்களை நல்ல முறையில் பராமரித்து அர்ச்சகர்களுக்கு அதிக அளவில் சன்மானம் வழங்க வேண்டும். ராமராஜ்ஜியம் என்றால் கிராம ராஜ்ஜியம். கிராமத்தில் ஆன்மீகம் தழைத்தோங்க வேண்டும். யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழுந்ததை விமர்சிக்கிறார்கள்.
"இளம் வயதாக இருந்தாலும் சன்னியாசியாக இருந்தால் காலில் விழுவது எனது பழக்கம்" என ரஜினியே விளக்கமளித்துவிட்டார். ஆனாலும் யோகி ஆதித்யநாத் யோகியா சன்னியாசியா என முரசொலி ஆராய்ச்சி செய்கிறது. யோகி ஆதித்யநாத் 5 முறை எம்பியாக இருந்துள்ளார்.
சன்னியாசியாக இருந்து கடின உழைப்பால் முதல்வர் பதவியை அடைந்துள்ளார். Sonஐ வைத்து பதவிக்கு வந்தவர்களுக்கு சன்னியாசி குறித்தெல்லாம் தெரியாது. யோகி காலில் ரஜினி விழுந்ததால் அவர்களை தாக்கி பேசுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறார்கள அதை செய்ய வேண்டும் என நினைப்பது சர்வாதிகாரமா, ஜனநாயகமா,
கடவுள் இல்லை என்றால் நீங்கள் கடவுள் இல்லை என கூற வேண்டும். கருப்பு போட்டால் நீங்களும் கருப்பு போட வேண்டும். காலில் விழக் கூடாது என்றால் நீங்களும் காலில் விழக் கூடாது. நீங்கள் எங்கெல்லாம் யார் காலில் விழுகிறீர்கள் என்பது இந்த மக்கள் அறிவார்கள். கலாச்சார பழக்கத்தை அவரவர் வழியில் விட்டுவிட வேண்டும். இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications