கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போலீஸ் கண் முன்.. பல்லடம் தள்ளுவண்டி வியாபாரியை மோசமாக தாக்கிய பாஜகவினர்- 7 பேர் அதிரடி கைது

Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்: பல்லடத்தில் நேற்று தள்ளுவண்டி வியாபாரி ஒருவரை பாஜகவினர் மோசமாக தாக்கிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பாஜகவினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Recommended Video

    மோடியை விமர்சித்ததாக கூறி பல்லடம் வியாபாரி மீது போலீசார் முன்னிலையில் பாஜகவினர் கொடூர தாக்குதல்

    கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாப்பில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. பஞ்சாப்பிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஹுசைன்வாலா என்று பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்திற்கு பிரதமர் மோடி செல்லும் போது இந்த சம்பவம் நடைபெற்றது.

    3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை

    இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடிக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று பாஜகவினர் நாடு முழுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

    போராட்டம்

    போராட்டம்

    இந்த நிலையில் தமிழ்நாட்டிலும் கொங்கு மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் பாஜகவினர் போராட்டங்களை முன்னெடுத்தனர். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி கொங்கு மாவட்டங்களில் பாஜகவினர் போராட்டங்களை மேற்கொண்டனர். முக்கியமாக பாஜகவினர் பலர் கொங்கு மாவட்டங்களில் திறக்கப்பட்டு இருந்த கடைகளை மூட சொல்லி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

    தாக்குதல்

    தாக்குதல்

    நேற்று பாஜகவினர் நடத்திய இந்த போராட்டத்தில் பல்லடத்தில் தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் மோசமாக தாக்கப்பட்டார். அங்கு கடைகளை அடைக்க சொல்லி போராட்டம் செய்து கொண்டு இருந்த பாஜகவினர் சாலை ஓரம் இருந்த தள்ளு வண்டி வியாபாரியை தாக்கினார்கள். மிக மோசமாக மாறி மாறி தாக்கியதில் அங்கேயே மயங்கி தள்ளுவண்டி வியாபாரி சரிந்து விழுந்தார். பிரதமர் மோடி பற்றி தவறாக பேசியதாக கூறி இந்த வியாபாரியை பாஜகவினர் தாக்கி உள்ளனர்.

    மோசம்

    மோசம்

    இதில் அங்கேயே அந்த வியாபாரி மயங்கி விழுந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்த முத்துசாரி என்ற அந்த பல்லடம் வியாபாரி.. நான் ஏன் மோடியை பற்றி தவறாக பேச போகிறேன். என்னடைய தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு பாஜகவினர் செல்லும்படி கூறினார்கள். ஆனால் தள்ளுவண்டி சிக்கிக்கொண்டதால் நகற்ற முடியவில்லை. இதனால் என் மீது கோபம் அடைந்து என்னை போட்டு மோசமாக தாக்கினார்கள். அங்கு இருந்த போலீஸ் கூட எதுவும் செய்யவில்லை என்று அந்த வியாபாரி சோகமாக குறிப்பிட்டுள்ளார்.

    கைது

    கைது

    இந்த சம்பவம் நடந்த போது போலீஸ் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இந்த நிலையில் பல்லடத்தில் நேற்று தள்ளுவண்டி வியாபாரியை தாக்கிய பாஜகவினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாஜகவினர் இளைஞரணி நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. கைது செய்யப்பட்ட 7 பேரும் தாராபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Road side vendor thrashed in Palladam by BJP members: Police took action against 7 party members.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X