'இப்படியா போட்டு அடிக்கிறது'.. கொடூர ஆசிரியரால் கண்ணீர் விட்டு கதறிய மாணவன்.. என்ன நடந்தது?
கோவை: கோவையில் உள்ள தனியார் பள்ளியில் சட்டையை இறுக்கமாக அணிந்து வந்ததற்காக 11-ம் வகுப்பு மாணவரை பள்ளி ஆசிரியர் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மாணவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருபவர் மிதுன். இந்த நிலையில் மாணவர் மிதுன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் இறுக்கமான ஆடை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது.

மிகக் கடுமையாக தாக்கியுள்ளார்
''ஏன் பள்ளிக்கு இறுக்கமான ஆடை அணிந்து வருகிறாய்'' என்று மாணவனிடம் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித் கேட்டுள்ளார். இதற்கு மாணவர் மிதுன் தகுந்த காரணங்களை கூறியபோதும் இதனை காதில் ஏற்றிக்கொள்ளாத ஆசிரியர் சிவரஞ்சித் மிதுனை மிகக் கடுமையாக தாக்கியுள்ளார். மாணவன் வலியால் அலறி துடிக்கும் அளவுக்கு கொடூரமாக தாக்கி இருக்கிறார்.

தீவிர சிகிச்சை
இந்த கொடூர தாக்குதலில் மாணவர் மிதுன் காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து நிருபர்களிடம் பேட்டியளித்த மாணவர் மிதுன் கூறியதாவது:-

மாணவன் சொல்வது என்ன
பள்ளி சார்பில் கொடுக்கப்பட்ட சீருடை எனக்கு சரியாக பொருந்தவில்லை. இதன் காரணமாக அதனை தைத்து இறுக்கமாக அணிந்து வந்தேன். இதற்காக தகாத வார்த்தையில் தன்னை பேசியதுடன் கொடூரமான முறையில் தன்னை அனைவர் முன்னிலையிலும் ஆசிரியர் அடித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு ஆசிரியர் தன்னை தாக்கி விட்டதாக மாணவர் மிதுன் கூறினார்.

முறையான பதில் இல்லை
ஆசிரியரின் இந்த கொடூர செயலை மாணவனின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர். அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆசிரியர் சிவரஞ்சித்திடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications