பயத்தால் கோவை தெற்கு-க்கு மாறினேனா.. கரூரில் முடிந்தால் வென்று காட்டுங்க.. செந்தில் பாலாஜி சவால்!

Subscribe to Oneindia Tamil

கோவை: நான் பயந்து கொண்டு கோவை தெற்கு தொகுதி சென்றுவிட்டேன் என்று கூறுவோர், முடிந்தால் கரூரில் ஜெயித்துவிட்டு பேச சொல்லுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சவால் விடுத்துள்ளார். தவெக ஒரு கட்சியே இல்லை என்று கூறிய செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கரூர் மாவட்டத்தில் அரசியல் செய்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த முறை கோவை தெற்கு தொகுதிக்கு இடம் மாறி இருக்கிறார். கரூரில் இருந்து கோவைக்கு சென்றால் தான் செந்தில் பாலாஜியின் அரசியல் வளர்ச்சி அதிகரிக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கணக்கு போட்டுள்ளனர். இதனால் கோவையில் செந்தில் பாலாஜி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

Senthil Balaji

ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தினால் தான் செந்தில் பாலாஜி தொகுதி மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதுகுறித்து செந்தில் பாலாஜி பேசுகையில், கரூர் சம்பவத்தினால் என் மீது அதிருப்தி இருக்கிறது என்று யார் சொல்கிறார்கள்.. எதிர்க்கட்சிகள் சொன்னால் உண்மையாகிவிடுமா? அவ்வளவு தைரியம் இருந்தால், கரூர் மாவட்டத்தில் வந்து எதிர்க்கட்சித் தலைவர் போட்டியிட வேண்டியதுதானே?

அல்லது அதிமுகவில் தைரியமான ஆட்களை நிறுத்தலாமே.. கரூரை முடிந்தால் ஜெயித்து பார்க்க சொல்லுங்கள்.. அதிமுகவில் யாருக்கும் தலைமை தொகுதி மாற்றி கொடுக்கவ்லில்லையா? கரூர் டூ கோவைக்கு 2 மணி நேரம்தான் பயணம்.. என் மீது சொல்லப்படும் விமர்சனங்கள் அனைத்தும் அரசியலுக்காக தான். தவெக ஒரு கட்சியா? நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளாண்.

எந்த அரசியல் தலைவருக்காகவாது வீட்டின் கேட் திறந்தால் லைவ் போடுவார்களா? ஓரளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து விளம்பரம் கொடுக்கலாம். தவெகவை பற்றி பேசுவது நேர விரயம். தவெக எத்தனை ஊர்களில் பிரச்சாரம் செய்திருக்கிறது? தேர்தலே இன்னும் சில நாட்களே உள்ளது. தேர்தல் முடிவடைந்த பின் தவெகவின் வாக்கு சதவிகிதத்தை பார்க்கலாம். நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.

தவெக வாக்கு சதவிகிதம் அறிந்த பின் அந்தக் கட்சியை பற்றி பேசி கொள்ளலாம். கரூர் சம்பவத்தை வைத்து திமுகவை சாடி மீம்ஸை பார்க்கும் போது சிரிப்பு தான் வரும். எங்களின் உழைப்பு மக்களுக்கு தெரியும்.. மீம்ஸ்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. எங்களின் பணிகளில் கவனம் செலுத்துவோம். கோவை 2021ல் ஒரு தொகுதியில் கூட திமுக வெல்லவில்லை. எதிர்க்கட்சி தான் வென்றது.

ஆனால் கோவையில் அதிக திட்டங்களை செயல்படுத்தினோம். ஜிடி நாயுடு மேம்பாலத்திற்கு ரூ.1,800 கோடி செலவு செய்திருக்கிறோம். செம்மொழி பூங்கா கட்டினோம். ஜிடி நாயுடு மேம்பாலத்திற்கு முன் எவ்வளவு வழக்குகள் இருந்தது என்று அனைவருக்கும் தெரியும். அந்த வழக்குகளை முடித்து கட்டுமான பணிகள் முடித்து திறந்து வைத்துள்ளோம்.

கோவையை பொறுத்தவரை படித்தவர்களுக்கு ஐடி துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். இன்னும் முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தொழிற்சாலைகளை கொண்டு வருவோம். மாநகராட்சியில் சீரான குடிநீர் விநியோகம் கோரிக்கையாக உள்ளது. அதனை சரி செய்வோம். திமுக மீது எந்த அதிருப்தியும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+