முதல் அடி திமுகவுடையது.. டெல்லி குஜராத் எங்கிருந்து வந்தாலும் பருப்பு வேகாது.. செந்தில்பாலாஜி அதிரடி
கோவை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற வியூகம் வகுக்கிறார்கள். செந்தில் பாலாஜி, குஜராத்தில் இருந்து வந்தாலும், டெல்லியில் இருந்து வந்தாலும் கோவையில் பருப்பு வேகாது. முதல் அடி திமுகவினருடையதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டன. 4 முனை போட்டியால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

கோவை அரசியல்
கொங்கு மண்டல அரசியல் களம் அதிக கவனம் பெற்று வருகிறது. கடந்த கால வெற்றிகள் மூலம் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. அந்தப் பகுதியில் தங்களின் வெற்றியை தக்க வைப்பதற்கு அதிமுக தீவிர முயற்சி செய்து வருகிறது. அதேநேரத்தில் கொங்கு மண்டலத்தின் ஆழமாக கால் பதிப்பதற்கு திமுகவும் காய் நகர்த்தி கொண்டிருக்கிறது. கடந்த 5 வருடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகமுறை விசிட் செய்தது கோவையில் தான்.
கோவை, கரூர், நீலகிரி, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக வெற்றியை உறுதி செய்ய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் திமுக தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
பருப்பு வேகாது
இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, "ஒவ்வொரு தொகுதியிலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகள் எவ்வளவு, பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது எவ்வளவு வாக்குகள் பெற்றனர், தனித்து போட்டியிட்டு அதிமுக, பாஜக எவ்வளவு வாக்குகள் பெற்றன என்ற தகவலை ஆராயுங்கள். அதை அறிந்து, நமக்கு எவ்வளவு வாக்குகள் தேவை என திட்டமிட்டு களப்பணியாற்றுங்கள்.
நம் வெற்றியை உறுதி செய்கிற வகையில் பணி இருக்க வேண்டும். நம் அரசின் சாதனை திட்டங்களை வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும். கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, இது திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். டெல்லியில் இருந்து வந்தாலும் சரி.. குஜராத்தில் இருந்து வந்தாலும் சரி.. சேலத்தில் இருந்து வந்தாலும் சரி. எங்கிருந்து வந்தாலும் இங்கு பருப்பு வேகாது.
முதல் அடி
சட்டமன்ற தேர்தலில் முதல் அடி திமுகவுடையதாக இருக்க வேண்டும். திமுகவினர் தடுப்பு ஆட்டம் ஆடாமல் அடித்து ஆட வேண்டும். எப்போதும் முதல் அடி நம்முடையதாக இருக்க வேண்டும். நம் அரசின் சாதனை திட்டங்களை வீடு தோறும் கொண்டு சென்று, கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வெல்ல வேண்டும். நம்ம தான் ஜெயிப்போம். நம்ம மட்டும் தான் ஜெயிப்போம்" என்றார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications