சொன்னதை செய்த செந்தில் பாலாஜி.. கோவை தெற்கில் மீண்டும் சர்ப்ரைஸ்
கோவை: தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறுகிறது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கோவையில் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற திட்டத்துடன் செந்தில் பாலாஜி களமிறங்கியுள்ளார். பிரச்சாரத்தில் தொடக்கத்தில் குறிப்பிட்ட விஷயத்தை செந்தில் பாலாஜி நிறைவேற்றியுள்ளார். மேலும் ஒரு சர்ப்ரைஸ் அறிவிப்பை கொடுத்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் பிரச்சாரம் செய்த செந்தில் பாலாஜி பேசுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் இல்லை. ஆனாலும் தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் தானே சட்டமன்ற உறுப்பினராக எண்ணி, முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

திமுகவில் இணைந்த பாஜகவினர்
கோவையின் அடையாளமாகத் திகழும் செம்மொழிப் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அவிநாசி சாலை மேம்பாலம், ஜி.டி. நாயுடு மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்துள்ளோம். மேற்கு புறவழிச்சாலை, பெரியார் நூலகம், சாலைகள் புதுப்பிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்துள்ளன. 100 அல்ல, ஆயிரம் கோரிக்கைகள் வந்தாலும் அதை நிறைவேற்றி தரும் உங்கள் வீட்டு பிள்ளையாக இருப்பேன்.
கோவை தெற்கு தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றுவேன்" என்றார் . நேற்றைய பிரச்சாரத்தின்போது 100 க்கும் மேற்பட்ட பாஜக இளைஞரணியினர் செந்தில்பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். கோவை தெற்கு தொகுதி தற்போது பாஜக வசம் உள்ளது. அந்தக் கட்சியின் இளைஞர்கள் திமுகவில் இணைந்திருப்பது பாஜகவினரை அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.
செய்து காட்டிய பாலாஜி
கோவை தெற்கு தொகுதியில் 11 வார்டுகள் உள்ளன. இந்த 11 வார்டுகளிலும் நடந்தே சென்று தான் பிரச்சாரம் செய்வேன் என்று செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதனால் கடந்த 2 வாரங்களில் கோவை தெற்கு தொகுதியின் அனைத்து வார்டுகளிலும் நடந்தே சென்று நேற்றுடன் முதல்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டார்.
கோவையில் உள்ள மற்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் அவர் திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் இருப்பதால் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பயணம் செய்து தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.
சர்ப்ரைஸ்
கோவை தெற்கு தொகுதியின் அனைத்து வார்டுகளில் பிரச்சாரம் செய்திருந்தாலும், அங்கு மீண்டும் செந்தில் பாலாஜி பிரச்சாரம் செய்யவுள்ளார். விரைவில் அங்கு இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை செந்தில் பாலாஜி மேற்கொள்ளவுள்ளார். இதனால் திமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications