கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"தாண்டியா ஆட்டமும் ஆட.." ஸ்மிருதியும், வானதி சீனிவாசனும் ஆடுனாங்க பாருங்க கோலாட்டம்.. கலகலத்த கோவை

Google Oneindia Tamil News

கோவை: ஹிந்தி பாடல் பின்னணியில் ஒலிக்க.. கையில் கோல் எடுத்துக் கொண்டு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, கோவை தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோலாட்டம் ஆடி அசர வைத்துள்ளார்கள்.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அங்கு களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

எனவே, வானதி சீனிவாசனை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்பதற்காக மத்திய பாஜக தலைவர்கள் கோவை நோக்கி வரிசையாக படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தீவிர பிரச்சாரம்

தீவிர பிரச்சாரம்

வானதி சீனிவாசனும் தனது பிரச்சாரத்தை அடுத்தடுத்த கியருக்கு மாற்றியுள்ளார். மாட்டு வண்டி ஓட்டிச் செல்வது, பேட்மிட்டன் ஆடுவது, கீரைகளுடன் செல்பி எடுப்பது என்று மக்களோடு மக்களாக கலந்து பழகி வாக்கு சேகரித்து வருகிறார்.

கோலாட்டம்

கோலாட்டம்

இந்த நிலையில்தான், கோவை தெற்கு தொகுதிக்கு இன்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வந்திருந்தார். அங்கே ஒரு அரங்கத்தில், ஸ்மிருதி இராணி கோலாட்டம் ஆட, வானதி சீனிவாசனும் அவருடன் சேர்ந்து கோலாட்டம் ஆடினார். கூட சில பெண்களும் சுமார் இரண்டு சுற்றுகள் சுற்றி வந்து கோலாட்டம் போட்டனர். அப்போது பின்னணியில் ஹிந்தி பாட்டு பாடிக் கொண்டிருந்தது. சுற்றியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தினர்.

கோவை தெற்கு

கோவை தெற்கு

இந்த நடனத்தை குஜராத்தின் பிரசித்தி பெற்ற தாண்டியா நடனம் என்று குறிப்பிட்டுள்ளது ஏ.என்.ஐ செய்தி நிறுவனம். ஆனால் பாஜக தொண்டர்கள் இதை கோலாட்டம் என்கிறார்கள்.

ஹிந்தி

அது ஒரு பக்கம் என்றால்.. ஹிந்தி மொழியில் பாடலை பாட விட்டு எப்படி ஆடலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, வட மாநில பெண்கள் பலரும் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்வதாக ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Coimbatore: Union Minister Smriti Irani performs Dandiya with BJP workers, as a part of election campaigning for Vanathi Srinivasan, the party's candidate from Coimbatore South constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X