சீமானை அன்போடு கட்டித்தழுவியதற்கு காரணம் என்ன? அண்ணாமலை சிரித்துக் கொண்டே கொடுத்த ரியாக்சன்
கோவை: கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை பார்த்ததும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைக்குலுக்கி ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்
தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்கள் அண்ணாமலை - சீமான். தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமானும் அரசியலில் மாறுபட்ட சித்தாந்தத்தை கொண்ட தலைவர்கள். அரசியல் ரீதியாக இருவரும் கடுமையாக விமர்சித்துக் கொள்வதை பார்க்க முடியும்.

இந்த நிலையில், இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீரென்று ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் கோவையில் நடைபெற்றது. கோவை லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை மருத்துவர் பழனிவேலு வாழ்க்கை குறித்த புத்தக வெளியீட்டு விழா இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக தலைவர் அண்னாமலை, நாம் தமிழர் கட்சியி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் உள்பட பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று இருந்தனர்.
இந்த விழாவில் பங்கேற்க வந்த அண்ணாமலை, சீமானை பார்த்ததும் அவரை நோக்கி சென்றார். அண்ணாமலை வருவதை அறிந்த சீமான் சிரித்தபடி எழுந்து நின்றார். அருகே வந்த அண்ணாமலை புன்சிரிப்புடன் சீமானிடம் கைக்குலுக்கினார். அதன்பிறகு அவர் சீமானை கட்டியணைத்து ஆரத்தழுவி வாழ்த்து கூறினார். பதிலுக்கு சீமானும் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பிறகு இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் அமர்ந்தனர். சீமான் - அண்ணாமலை சந்தித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் சீமானை கைக்குலுக்கி கட்டித்தழுவியதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அண்ணாமலை சிரித்துக்கொண்டே பதில் கூறினார். அவர் கூறியதாவது:-
சீமானை பார்த்ததுமே கட்டியணைத்த அண்ணாமலை.. நெகிழ வைத்த கோவை.. 2 பேருக்கும் எவ்வளவு பாசம் பாருங்க
பழனிவேலை பொறுத்தவரை கோவையின் பெருமை, கோவையின் அடையாளம். ரொம்ப பெருமையாக இருக்கிறது. கோவையை சேர்ந்தவருடைய ஒரு மனிதனின் வாழ்க்கை சரித்திர புத்தக வெளியீட்டு விழாவுக்கு திமுக அமைச்சர்கள், அதிமுக 7 முன்னாள் அமைச்சர்கள், பாஜக சார்பில் நானும் மற்ற மூத்த தலைவர்களு, செந்தமிழர் சீமான், அண்ணன் அன்புமணி ராமதாஸ், ஜிகே வாசன் என எல்லாரும் ஒருவரை கவுரவப்படுத்துவதற்காக கட்சி பார்க்காமல் வந்திருக்கிறார்கள்.
இது எவ்வளவு பெரிய விஷயம் பார்த்தீங்களா.. இந்த மேடை அரசியல் மேடை கிடையாது. அது சீமான் அண்ணனாக இருக்கட்டும். யாராக இருந்தாலும் கூட.. நான் இந்த மேடைக்கு வந்திருப்பது அண்ணன் பழனிவேலுக்காக.. கோவையை சேர்ந்த தமிழனின் சாதனையை பாராட்டுவதற்காக.. இவ்வாறு அவர் கூறினார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்?











Click it and Unblock the Notifications