2 வடைக்கு இவ்வளவு பெரிய போரா? கடைக்காரரிடம் மல்லுகட்டிய பெண் அதிகாரி! திரண்டு வந்த கும்பல்!
பெண் அதிகாரி ஒருவர் டீக்கடைக்காரரை தாக்கி உள்ளார்
கோவை: "ஒரு புறாவிற்கு போரா" என்று வடிவேலு 23-ம் புலிகேசி படத்தில் சொல்லுவாரே, அதுமாதிரி ஒரு அக்கப்போர் கோவையில் நடந்துள்ளது...!
Recommended Video
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் அருணகிரி... அவரது கடை அமைந்துள்ள கட்டிட வளாகத்தில் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு டீக்கடையில் 2 வடை வாங்கியதாக கூறப்படுகிறது..

தகராறு
இந்த நிலையில் அதற்கு பணம் கொடுக்காத நிலையில் இன்று அப்பெண் அருணகிரியின் டீக்கடைக்கு இன்று மறுபடியும் வந்துள்ளார்... அப்போது, அந்த பெண்ணிடம், வாங்கிய வடைக்கான பணத்தை தருமாறு கடை ஓனர் அருணகிரி கேட்டுள்ளார்... ஒரு நிறுவனத்தில் உயர்பதவியில் வேலை பார்க்கிறேன், என்னிடம் 2 வடைக்கான பணத்தை கேட்கிறீங்களே? என்று சொல்லி, டீ கடைக்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்..

டீக்கடை
அதுமட்டுமல்ல, தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்க்கும் அத்தனை நபர்களையும் உடனே டீக்கடைக்கு வரவழைத்தார்.. போனை போட்டு வீட்டில் உள்ள பெற்றோர், சொந்தக்காரர்களையும் டீக்கடைக்கு வரவழைத்துவிட்டார். மொத்த பேரும் சேர்ந்து என்ன ஏதென்றுகூட விசாரிக்காமல், டீக்கடைக்காரரை தகாத வார்த்தைகளால் பேச ஆரம்பித்துவிட்டனர். டீ குடிக்க வந்த வாடிக்கையாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்..

தகாத வார்த்தை
அதில் ஒரு வாடிக்கையாளர் இவர்களை சமாதானப்படுத்த முயன்றார்.. பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது என்று சொன்னார்.. ஆனால் அந்த நபரையும் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்துவிட்டார் அந்த பெண் அதிகாரி.. பிறகு மொத்த குடும்பமும் சேர்ந்து, அந்த நபரை சரமாரியாக தாக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.. இதற்கு பிறகுதான் போலீசுக்கு விஷயம் தெரிந்து அவர்கள் விரைந்து வந்தனர்.. இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் எச்சரித்தனர்..

மிரட்டல்
ஆனால், போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி, சமாதானம் செய்ய வந்தவரை அந்த பெண் மிரட்டி கொண்டே இருந்தார்.. தரக்குறைவாக பேசினார்.. குடும்பத்தினர் அந்நபரை தாக்கும்போது , இந்த பெண்ணும் பாய்ந்து கொண்டு போய் தாக்க முயல்கிறார்.. அவ்வளவு கூட்டத்திலும் பெண்ணின் மிரட்டல்குரல்தான் கேட்டுக் கொண்டே இருந்தது.. இளம்வயது பெண் போல தெரிகிறார்.. படித்தவர், ஒரு அதிகாரியா இப்படியெல்லாம் பேசுவது என்று அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அவரது நடவடிக்கைகள் அமைந்திருந்தன..

பரபரப்பு
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது... இந்த விஷயம் கேள்விப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களும் திரண்டு வந்துவிட்டனர்.. கூட்டமாக அதிகமாக இருப்பதை பார்த்து, ரோட்டில் சென்று கொண்டிருந்த பொதுமக்களும் திரண்டு வந்தனர்.. இதனால் ஆவாரம்பாளையம் ரோட்டில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுவிட்டது.. வரிசை கட்டி வண்டிகள் நிற்க தொடங்கின.. பொதுமக்கள் நடமாட முடியாமல் திணறினர்.. இதில் கொடுமை என்னவென்றால் இவ்வளவு பெரிய கூட்டத்தில், ஒருத்தர்கூட மாஸ்க் போடவில்லை.. அவர்கள் ஏன் மாஸ்க் போடவில்லை என்று போலீசாரும் கண்டிக்கவில்லை.

அதிர்ச்சி
இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதை வெறும் வடை விஷயமாகவே மட்டும் எடுத்து கொண்டு சாதாரணமாக கடந்து விட முடியாது.. தான் சாப்பிட்ட 2 வடைக்கே, காசு தராத ஒரு அதிகாரி, தன் துறை ரீதியாக விவகாரங்களில் எத்தகைய போக்கை கடைப்பிடிப்பார்? என்ற அடிப்படை சந்தேகத்தையும் கிளப்புகிறது.. யாராக இருந்தாலும் தனக்கான சலுகையை பெற்று கொள்ளட்டும்.. அது மறுப்பதற்கில்லை.. ஆனால் அடுத்தவர் உரிமையை தட்டி பறிப்பதும், தாக்குவதும், தரக்குறைவாக பேசுவதும், எந்த வகையில் நியாயம்?
படித்தால் மட்டும் போதுமா?
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications