சூப்பர் சம்பவம்.. வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்.. இந்தாண்டு நீட் தேர்வில் வெற்றி
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள வெள்ளியங்காட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் பயின்ற 3 மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு முதலே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டன.
கொரோனா 2ஆம் அலை குறைந்த பின்னரே மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டன.

நீட் தேர்வு
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் +2 தேர்வுகள் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. +2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போதிலும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறை தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்று. இங்குத் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களே அதிகம் பணியாற்றி வருகின்றனர்.

வால்பாறை தேயிலைத் தோட்டங்கள்
பள்ளிப் படிப்பைத் தாண்டி கல்லூரி படிப்பு படிக்க முடியாததால், பல ஆண்டுகளாக இங்குள்ள குழந்தைகளும் தேயிலைத் தோட்டங்களிலேயே பணியாற்றும் சூழலுக்குத் தள்ளப்பட்டனர். இந்தச் சூழலில் தான் கடந்த 2008ஆம் ஆண்டில் இப்பகுதியில் கல்லூரி திறக்கப்பட்டது. அந்த கல்லூரி தற்போது அரசு கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் எளிதாகக் கல்லூரி படிப்பைப் படிக்கும் சூழல் ஏற்பட்டது.

மூவர் தேர்ச்சி
இந்நிலையில் வால்பாறை நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த 3 மாணவிகள் இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் இந்தத் தேர்வில் ஈட்டியார் எஸ்டேட்டை சேர்ந்த தர்ஷினி, பச்சைமலை எஸ்டேட்டை சேர்ந்த மகாலட்சுமி, உருளிக்கல் பெரியார் நகரைச் சேர்ந்த மிதுனா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

பொதுமக்கள் பாராட்டு
இவர்களின் வெற்றிக்கு உதவியாக வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன், ஆசிரியைகள் சுமதி, கவிதா, சரஸ்வதி ஆகியோர் நீட் தேர்வுக்காகச் சிறப்புப் பயிற்சி அளித்தனர். அவர்களுக்கு மாணவியும் மாணவிகளின் பெற்றோரும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். முதன்முறையாக வால்பாறை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றது பொதுமக்களிடையே மகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications