கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மாமதுரை காண வந்த மருதிருவர்! செக்கிழுத்த சிறை காண வந்த வ.உ.சி -நெகிழ வைத்த அரசின் அலங்கார ஊர்தி!

Google Oneindia Tamil News

கோவை/ மதுரை: தமிழக அரசின் குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் கோவை வஉசி மைதானத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் வீரத்தாய் வேலுநாச்சியார், தேசவிடுதலைக்காக ஒட்டுமொத்த குடும்பத்தார் உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் தூக்கு மேடையேறிய மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவங்களுடனான அலங்கார ஊர்தி மதுரைக்கு வந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்களுடனான தமிழக அரசின் ஊர்வலங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

Recommended Video

    மாமதுரை காண வந்த மருதிருவர்! செக்கிழுத்த சிறை காண வந்த வ.உ.சி -நெகிழ வைத்த அரசின் அலங்கார ஊர்தி!

    3 பேரில் ஒருவர் பலியாக வாய்ப்பு.. நியோ கோவ் உருமாறிய வைரஸ் பற்றி வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை 3 பேரில் ஒருவர் பலியாக வாய்ப்பு.. நியோ கோவ் உருமாறிய வைரஸ் பற்றி வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

    தமிழக உலா

    தமிழக உலா

    இதையடுத்து 3 அலங்கார ஊர்திகளை தமிழகம் முழுவதும் வலம் வரும் நிகழ்வை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்படி ஒரு ஊர்தி கோவைக்கு வந்தடைந்தது. இந்த ஊர்தியில் மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, சேலம் விஜயராக வாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த ஊர்தியில் சுதேசி கப்பலும் சிதம்பரனார் சிறையில் செக்கிலுக்கும் காட்சிகளும் பாரதியார், சிதம்பரனாரின் சுதந்திர உணர்வு வரிகளும் இடம்பெற்றுள்ளன.

    கோவையில் அலங்கார ஊர்தி

    கோவையில் அலங்கார ஊர்தி

    இந்த ஊர்தி தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வ.உ.சி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியினை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்து பார்வையிட்டார். ஞாயிற்றுக்கிழமை வரை இந்த ஊர்தி இங்கு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பார்வையிட வரும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் ஆர்வம்

    பொதுமக்கள் ஆர்வம்

    முதல் நாளான இன்றே பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டுச் சென்றனர். பலரும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். முதல் நாளான இன்று பரதநாட்டியம், நிமிர் குழுவினரின் பறையிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    மதுரையில் வீரத்தாய் வேலுநாச்சியார், மருதிருவர்

    மதுரையில் வீரத்தாய் வேலுநாச்சியார், மருதிருவர்

    இதேபோல் வீரத்தாய் வேலுநாச்சியார், தேசவிடுதலைக்காக ஒட்டுமொத்த குடும்பத்தார் உறவுகள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் தூக்கு மேடையேறிய மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவங்களுடனான அலங்கார ஊர்தி மதுரைக்கு வந்தது. பூமழை மொழிந்து தங்களது மாமன்னர் மருது சகோதரர்களையும் வீரத்தாய் வேலுநாச்சியாரையும் பொதுமக்கள் வரவேற்ற காட்சி நெகிழ வைத்தது.

    English summary
    Tamilnadu Govt's Republic Day tableaus today reached to Madurai and Coimbatore.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X