கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"243-க்கு" லவ் பிரேக் அப்.. மீண்டும் வந்த மாமா பொண்ணு! யூடர்ன் போட வச்சிடாதீங்க! டிடிஎஃப் வாசன்

Google Oneindia Tamil News

கோவை: 243 கி.மீ. வேகத்தில் செல்வதாக செய்திகள் வந்ததால் நான் காதலித்து வந்த எனது மாமா மகள் என்னிடம் பேசுவதையே நிறுத்திக் கொண்டார் என டிடிஎஃப் வாசன் உருக்கமாக தெரிவித்தார்.

கோவையை சேர்ந்த 22 வயதான டிடிஎஃப் வாசன் சாகச பைக்குகளை ஓட்டி அதை யூடியூப் சேனலில் வீடியோவாக போடுவார். இவருக்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோயர்கள் உள்ளனர்.

இவர் பைக்கிலேயே லடாக் வரை சென்று பிரபலமானார். இவர் விரைவில் டுகாட்டி பைக்கை வாங்குவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 243 கி.மீ வேகத்தில் ஒரு நெடுஞ்சாலையில் சென்ற வீடியோ வைரலானது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

ஐ ஆம் சரண்டர்.. ஜெயில்ல போட்றாதீங்க ப்ளீஸ்! வீடியோவில் கதறிய டிடிஎஃப் வாசன்! விழுந்த அடி அப்படி! ஐ ஆம் சரண்டர்.. ஜெயில்ல போட்றாதீங்க ப்ளீஸ்! வீடியோவில் கதறிய டிடிஎஃப் வாசன்! விழுந்த அடி அப்படி!

டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசனை கைது செய்ய வேண்டும். அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இவர் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாகி வருகிறார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவர் செய்வதை பார்த்து எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லாமல் இளைஞர்களும் சாகசம் என்ற ஆபத்தான முறையை கையாண்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் எழுகிறது.

 243 கி.மீ.

243 கி.மீ.

எனினும் இந்த 243 கி.மீ. வேகத்தில் சென்றது ஜமுனா எக்ஸ்பிரஸ்வேயில்தான் சென்றேன் என்றும் அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில்தான் அந்த வேகத்தில் சென்றதாகவும், நான் போடும் வீடியோவால் யாருடைய மனதாவது புண்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் குறித்த சர்ச்சைகள் எல்லாம் ஆடி அடங்கின. தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். நேற்று முன் தினம் டிக்டாக் பிரபலம் ஜி.பி. முத்துவை தனது பைக்கில் அழைத்து கொண்டு வாசன் ரெய்டு சென்றார். அப்போது எதிரேயும் புதிரேயும் லாரிகள், வாகனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் வாசன் 150 கி.மீ. வேகத்தில் சென்றார்.

ஜிபி முத்து

ஜிபி முத்து

பின்புறத்தில் உட்கார்ந்திருந்த ஜிபி முத்துவின் வாயெல்லாம் ஆடியதாக அவரே அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இதுவும் சர்ச்சையை கிளப்பியது. 150 கி.மீ. வேகத்தில் ஆபத்தை உணராமல் செல்வதா, கைகளை விட்டுவிட்டு வாகனத்தை ஓட்டுவதா வாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய லைசன்ஸை கேன்சல் செய்ய வேண்டும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

150 கி.மீ. வேகம்

150 கி.மீ. வேகம்

இதுகுறித்து டிடிஎஃப் வாசன் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: ஜிபி. முத்து அண்ணனுடன் பைக்கில் சென்றது சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அது முழுக்க முழுக்க ஃபன்தான். ஆனால் 150 கி.மீ. வேகத்தில் போனதாக செய்திகள் வெளியாகிறது. நான் போனது உண்மைதான், தவறுதான், ஏற்கெனவே 243 கி.மீ. வேகத்தில் சென்றபோது எழுந்த பிரச்சினையால் நான் தற்போது வேகத்தை குறைத்துவிட்டேன். இனியும் படிப்படியாக 80 வரை வேகத்தை குறைக்க போகிறேன். இந்த வீடியோ எடுக்கப்பட்டதன் நோக்கமே மன உளைச்சலில் வருவோர் எங்களை பார்த்து சிரிக்க வேண்டும் என்பதுதான்.

லைசன்ஸ்

லைசன்ஸ்

அந்த நோக்கத்தை எடுத்துக் கொள்ளாமல் என்னை பிடித்து ஜெயில்ல போடணும் ,லைசன்ஸ்ஸ கேன்சல் பண்ணணும்னு செய்தி சேனல்கள் போடுறாங்க. நான் இந்த துறையில் நிறைய சாதிக்கணும், அத இத செய்தியா போட்டு என் லைஃப்ல கெடுத்துவிடாதீர்கள். இதை நான் வேண்டுகோளாக கேட்கிறேன். மற்றபடி நான் செய்தது தவறுதான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

பிளஸ் 1 படிக்கும் போது

பிளஸ் 1 படிக்கும் போது

நான் பிளஸ் 1 படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்தேன். அந்த லவ் பிரேக்கப் ஆகிவிட்டது. இதனால் நான் மன வேதனையில் இருந்தேன். பிறகு என்னை நானே தேற்றிக் கொண்டேன். தற்போது என் மாமா மகளை நான் காதலித்து வருகிறேன். ஆனால் 243 கி.மீ. வேகத்தில் சென்றதாக வெளியான செய்திகளால் என் மாமா வீட்டிற்கும் என் வீட்டிற்கும் பிரச்சினை ஏற்பட்டு அந்த பெண் என்னிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார்.

வெள்ளித்திரையில் வாசன்

வெள்ளித்திரையில் வாசன்

தற்போது மீண்டும் பேச தொடங்கியுள்ளார். மீண்டும் ஏதாவது செய்திகளை போட்டு இந்த காதலை கெடுத்துவிடாதீர்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இனி தான் வாகனம் ஓட்டும் போது ஸ்பீடோ மீட்டரை காண்பிக்காமலேயே ஓட்ட போவதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தற்போது ஷார்ட் பிலிமில் நடித்து வருகிறாராம். அடுத்து திரைப்படங்களிலும் நடிக்கிறாராம்.

English summary
V Blogger TTF Vasan says that he had love break up with his maternal uncle's daughter after 243 km speed issue araises in news channels.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X