’மன்மத வணக்கம்..’ டிரோல் ஆனாலும் பராவயில்லையாம்! தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சை பாருங்க

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையில் பேசிய தவெக எம்.எல்.ஏ கனிமொழி, நாம் எதாவது பேசினாலே டிரோல் செய்கிறார்கள். தமிழில் வணக்கம் சொன்னால் கூட டிரோல் பண்ணுறாங்க.. எனவே டிரோலில் வந்ததையே சொல்லிவிடலாமா என்று, எல்லாருக்கும் மன்மத வணக்கம் என சிரித்தபடியே பேசியது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை விளக்க நிகழ்ச்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் கூறியதாவது:-

TVK MLA Kanimozhi Greets Cadres and says Manmatha vanakkam before starting her speech

மன்மத வணக்கம்

தமிழில் வணக்கம் என்று சொன்னால் உடனே ஒரு டிரோல் பண்ணி விட்டுவிடுவார்கள். இதனால் டிரோலில் வந்ததையே சொல்லிவிடலாமா.. எல்லாருக்கும் மன்மத வணக்கம் என சிரித்தபடியே சொன்னார். நாம தேர்தல் பிரசாரம் ஆரம்பித்ததில் இருந்து யாரையாவது விமர்சித்து பேசியிருக்கோமா.. திமுகவை பத்தி பேசுனது கிடையாது. அதிமுகவை பத்தியும் பேசியது கிடையாது. நான் பாட்டுக்கு சிவனேன்னு, மக்களுக்கு சேவை செய்றேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.. அப்படித்தான் பேசியிருக்கேன்.

தங்க தளபதி முதல்வர் விஜய் தேர்தலில் நிற்பதற்கு எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தார். சரி, மக்களுக்கு சேவை செய்யலாம் என்று வந்தால், ஒரு பாடு படுத்தி எடுத்துட்டாங்க. பெரிய பக்க பலமாக அண்ணன், தம்பி என எல்லாரும் உதவி பண்ணாங்க.. இன்று எம்.எல்.ஏவாக வந்து நிற்பதற்கு நீங்க எல்லாரும் தான் காரணம்.. சின்ன குழந்தைகள் முதல் உங்க எல்லாராலும் தான் இன்று தெம்பாக தைரியமாக உங்க முன்னாடி வந்து நிற்கிறேன்.

11 மணி ஆகிடும்

சட்டசபை ஆரம்பித்ததில் இருந்து ஒருவகையில் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. என்ன என்று பார்த்தீங்கன்னா.. 234 தொகுதிகள் இருந்தாலும் சின்ன குழந்தைகள் முதல் 90 வயது தாத்தா வரைக்குக்கும் இந்த கவுண்டம்பாளையம் கனிமொழி பத்தி எல்லாருக்கும் தெரியும். பேசுறாங்களா இல்லையா.. கனிமொழியால் கவுண்டம்பாளையத்துக்கு பெருமையா? இல்லை கவுண்டம்பாளையத்தால் கனிமொழிக்கு பெருமா? ஆக மொத்தம் கவுண்டம்பாளையம் சரியான ரீச்ல இருக்கு. இது எல்லாத்துக்கும் தளபதி கொடுத்த வரம்.

நாம ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகிட்டு.. இப்போ சொல்றாங்க.. 100 நாளில் இந்த மேனா மினிக்கி என்ன வேலையை செஞ்சி கிளிச்சி இருக்கும். பாத்தீங்களா இத.. காலையில 10 மணிக்கு ஸ்டார்ட் பண்ணால், நைட்டு 10 அல்லது 11 மணி ஆகிடும் வீட்டுக்கு வர.. அந்த அளவுக்கு நம்முடைய மக்களின் குறைகள், மனுக்களை வாங்குகிறோம். வீட்டுக்கு வந்தும் மனு கொடுக்கிறார்கள்.

மக்களோட தேவைகளை

ஒருவர் எனக்கு வேலை இல்லை.. மனைவிக்கு வேலை இல்லை. மகன் படிச்சு இருக்கான் அவனுக்கு வேலை இல்லை.. எல்லாத்துக்கு ஒரு வேலை ஏற்பாடு பண்ணி கொடுங்க என மனு கொடுத்து இருக்காங்க.. நான் என்ன செய்ய முடியும். சட்டசபை போய்க்கொண்டு இருக்கு. ஏற்பாடு செய்யுறோம் என சொன்னேன். நாங்கள் மக்களோட தேவைகளை முகம் சுழிக்காமல் கேட்டு பார்த்து ஒவ்வொன்றையும் செய்வதற்கு தான் என்னை ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து இருக்கிறீர்கள். எனவே உங்களுக்கு எல்லாமும் செய்ய கடமைப்பட்டு இருக்கிறேன். என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+