பழனி முருகனை வேண்டுகிறேன்.. எல்.முருகனுக்கு ஜண்டா போட்ட செங்கோட்டையன்.. அவிநாசியில் அதோகதி
கோவை: தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். ஜனநாயகன்படம் கசிய மத்திய அமைச்சர் எல்.முருகன் தான் காரணம், அவரை தோற்கடிக்க பழனி முருகனை வேண்டுகிறேன் என்று செஙகோட்டையன் கூறியுள்ளார்.
கோவை நரசிம்ம நாயக்கன்பாளையம் பகுதியில் தவெக கவுண்டம்பாளையம் வேட்பாளர் கனிமொழி, மற்றும் மேட்டுப்பாளையம் வேட்பாளர் சுனில் ஆனந்த் ஆகியோரை நேரில் சந்தித்து தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

சிந்தாமல் சிதறாமல்
தொடர்ந்து கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் மத்தியில் பேசிய செங்கோட்டையன், "புதிய தலைமை தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. தற்போதுள்ள ஆட்சியின் அவலத்தை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். தீய சக்தியாகவும், ஊழல் ஆட்சியாகவும் உள்ள திமுகவை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பது மக்களின் ஆசையாக உள்ளது.
மக்களின் ஆசையை நிறைவேற்றும் ஒரே இயக்கம் தவெக தான். எங்கள் தலைவர் விஜய் தான் மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவார். நாம் தேர்தல் பணிகளை சரியாக செய்ய வேண்டும். மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். அந்த வாக்கை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டியது நம்முடைய கடமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படக்கூடிய ஒரே இயக்கம் தவெக.
திமுக டோக்கன்
நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வருகிறேன். தேர்தல் களத்தில் பத்து முறை தோற்ற பழனிசாமியால் திமுகவை வீழ்த்த முடியாது என்று மக்களே சொல்கிறார்கள். அதற்கு மாற்றாக நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம். அது வீணாகிவிடும். ஆகவே மாற்றத்தை விரும்புவோர் தவெகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
திமுக சார்பில் 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்துள்ளது. எட்டு கொடுத்தால் முடிந்துவிட்டது. அது என்றைக்கும் ஓடாது. இதில் திமுக வெற்றி பெற முடியாது என்பது தெரிகிறது. எனவே நாம் யாரும் கவலைப்பட வேண்டாம். நம்மிடம் உழைப்பு உற்சாகம் இருக்கிறது. மக்கள் ஆதரவு அனைத்தும் உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன் என்று தலைவர் விஜய் கூறியுள்ளார்,
எல் முருகனை தோற்கடிக்க பழனி முருகன்
இதை தமிழ்நாட்டில் வேறு எந்த கட்சியும் கூற முடியாது. ஜனநாயகன் திரைப்படம் சமூகவலைதளங்களில் கசிந்துள்ளது. ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துள்ளார்கள். அதை யார் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அந்த துறைக்கான அமைச்சர் யார் என்று பார்க்க வேண்டும். மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தான் துறை அமைச்சர்.
எல்.முருகனை தண்டிக்க வேண்டும் என்று பழனி முருகனை வேண்டுகிறேன். எல் முருகனை தோற்கடித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. இத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு ஒரு தலைவர் நமக்காக வருகிறார்" என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications