கவர்ச்சி காதலி.. டீச்சரக்காவிடம் கவிழ்ந்த பிசினஸ்மேன்.. தலையில் விழுந்த "இடிகள்" இருக்கே.. பரிதாபம்
கோவை: மார்டர்ன் டிரஸ் அணிந்த பெண்ணை பார்த்ததுமே சொக்கி மயங்கிவிட்டார் ராஜேஷ்.. அதற்கு பிறகு அவர் தலையில் விழுந்த இடியை பார்த்து, கோவையே அதிர்ந்து போய் கிடக்கிறது.. என்னாச்சு?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ்.. 44 வயதாகிறது.. இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
கடந்த 2020-ல் லோரேன் என்ற பெண்ணின் அறிமுகம் இவருக்கு கிடைத்துள்ளது.. அந்த லோரேனின் மூலமாக, அவரது தங்கை ஹேசல் ஜேம்ஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அழகி கவர்ச்சி
ஹேசல், கோவை போத்தனூர் சத்ய சாய் நகர் பகுதியில் வசித்து வருகிறார்.. எந்நேரமும் இவர் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பார்.. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்குகளில் தன்னுடைய நிறைய போட்டோக்களை அப்லோடு செய்வார்.. மார்டன் டிரஸ்தான் அணிவார்.. விதவிதமான ஆடைகளில் போட்டோக்கள், வீடியோக்களை ஹேசல் பதிவிட்டு வந்துள்ளார்.. இதையெல்லாம் பார்த்ததுமே, ராஜேஷூக்கு ஹேசலை மிகவும் பிடித்துவிட்டது.. அதற்கு பிறகு, 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டதாக தெரிகிறது.. ஆனால், ஹேசலுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது..

தலையில் இடி
ராஜேஷ் தன்னிடம் நெருங்கி பேசியதால், தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தையே ராஜேஷிடம் மறைத்துவிட்டார்.. பிறகு சில நாட்கள் கழித்து, தனக்கு திருமணமாகிவிட்டது என்றும், ஆனால், கணவர் இறந்துவிட்டார் என்றும் சொல்லியுள்ளார்... இதைக்கேட்டு ராஜேஷ் அதிர்ந்து போனார்.. பிறகு மெல்ல சுதாரித்துக்கொண்டதுடன், இளம்விதவை என்பதால், ஹேசல் மீது நிறைய பரிதாபமும், அனுதாபமும் வந்துவிட்டது. பிறகு இன்னொரு நாள், தன்னுடைய கணவர் இறக்கவில்லை, டைவர்ஸ் கேஸ் கோவை கோர்ட்டில் நடந்து கொண்டிருப்பதாக சொன்னார்.. இதைக்கேட்டதும் மறுபடியும் ராஜேஷூக்கு தலையே சுத்திவிட்டது.. எனினும், டைவர்ஸ் கிடைத்துவிடும் என்பதால், தன்னையே ஒருவழியாக தேற்றிக் கொண்டார்..

கண்ணீர் கண்ணீர்
பிறகு இன்னொரு நாள், தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாக ஹேசல் சொல்லவும், ராஜேஷ் தலையில், பெரிய்யய இடியே வந்துவிழுந்துவிட்டது... 2 குழந்தைகளை வளர்க்க தான் கஷ்டப்படுவதாகவும், தன்னுடைய தந்தையின் அரவணைப்பில்தான் இப்போது இருப்பதாகவும் கண்ணீர் வடித்துள்ளார் ஹேசல். இதைக்கேட்டதும் ராஜேஷ் மறுபடியும் அந்த பெண்ணிடம் மனமிறங்கினார்.. இதை சாக்காக பயன்படுத்தி கொண்ட ஹேசல், செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்கவும், 90 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார் ராஜேஷ்..

பணம் பொருட்கள்
பிறகு, சொந்தமாக பிசினஸ் செய்ய போவதாகவும், அதற்கு உதவி செய்யுமாறும் ஹேசல் கேட்கவும், கல்யாணம் செய்து கொள்ள போகும் பெண்தானே என்று நம்பி, ராஜேஷ் 20 லட்சம் ரொக்கம் தந்துள்ளார்.. இதைத்தவிர, காஸ்ட்லி செல்போன், ஸ்கோடா கார் வாங்கி கொடுத்துள்ளார்... இது எல்லாவற்றையும் செலவு, ஹேசலுக்கு மேக்கப் சாதனங்கள் வாங்குவதற்குதானாம்.. ராஜேஷூம் கணக்கு பார்க்காமல், பணம் பொருட்களை தந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணோ, பொருட்கள், பணத்தை வாங்குவதில் மிகவும் கவனமாக செயல்பட்டு ஒவ்வொரு பொருளையும் தன்னுடைய ஒவ்வொரு சொந்தாக்காரர் பெயர்களில் வாங்கியுள்ளார்...

கவர்ச்சி
இந்த சமயத்தில்தான் ராஜேஷூக்கு இன்னொரு அணுகுண்டு காத்திருந்தது... ஹேசலுக்கு ஒரு கள்ளக்காதலன் இருக்கிறாராம்.. அவர் பெயர் ஜஸ்டின்.. ராணுவ வீரராம்.. அவர் மட்டுமல்ல, அவரை போலவே பல ஆண்களிடம் ஹேசல் நெருங்கி பழகி வந்துள்ளது ராஜேஷ்க்கு தெரிய வந்துள்ளது.. இதற்கு மேல் பொறுமையிழந்த ராஜேஷ், இதை பற்றி ஹேசலிடம் கேட்டுள்ளார். அதற்கு ஹேசல், "ஒருத்தரோடு பர்சனல் வாழ்க்கையை பற்றி கேட்கலாமா? அது தப்பில்லையா? தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது" என்று ஹேசல் சொன்னதை கேட்டு அப்படியே ஷாக் ஆகிவிட்டார் ராஜேஷ்.. எல்லா விஷயமும் ராஜேஷுக்கு தெரிந்துவிட்டதால், அவரிடம் பேசுவதை குறைத்து கொண்டார் ஹேசல்.. இதனால் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு ராஜேஷ் கேட்டுள்ளார்.

மிரட்டல்
அதற்கு அந்த பெண், "பணத்தை திருப்பி தர முடியாது, பணத்தை திருப்பி கேட்டால், தன்னுடைய 2 குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன்" என்று சொல்லி மிரட்டியதாக தெரிகிறது.. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் மீண்டும் சில நாட்கள் கழித்து தனது பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஹேசல், "20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில், 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது" என்றாராம்.. இதனால், ராஜேஷ் உயிருக்கு பயந்துகொண்டு, கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போத்தனூர் போலீசாரும் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜேஷிடம் பழகி மோசடி செய்தது விசாரணையில் உறுதியானது..

தொழிலதிபர்
மேலும், ஹேசல் பற்றின மொத்த வண்டவாளமும் வெளியே வந்துவிட்டது.. ஹேசல் ஜேம்ஸ் குறித்து பல்வேறு தகவல்களும் கிடைத்தன. ஹேசலின் அப்பா பெயர் ஜேம்ஸ்.. ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஹேசல் காலேஜ் படிக்கும்போது கோவையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவரின் மகனை காதலித்து திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. ஹேசல் குடும்பத்தார், காவல் அதிகாரியின் மகனை மதம் மாற சொல்லி உள்ளனர்.. இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வருகின்றனர்... தனித்துவிடப்பட்ட ஹேசல், சுதந்திர பறவையாக வலம் வந்துள்ளார்.. மும்பை தொழிலதிபருடன் பேசி பழகி 20 லட்சம் ரூபாய் வரை பணம், கார் உள்ளிட்ட பொருட்களை வாங்கி ஹேசல் ஏமாற்றியுள்ளார்.

அட்டகாசம்
பிறகு, கோவையை சேர்ந்த ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவருடன் பழகி அவரை கல்யாணம் செய்ய திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, முதல் கணவரை கொலை செய்ய ஹேசல் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்போது கடைசியாக ராஜேஷ் சிக்கி, அவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் ஹேசல்.. இவ்வளவு அட்டகாசம் செய்த ஹேசல், கோவையில் பல பள்ளிகளில் டீச்சராக வேலை பார்த்துள்ளார்.. ஆனால் எல்லா இடங்களிலும் மோசடி செய்ததால், இவரை வேலையை விட்டு துரத்தி உள்ளனர்.. இப்போது ஹேசல் கைதாகி உள்ளார்.. விசாரணையும் நடக்கிறது..!!
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications