கோவைக்கு குறி.. பதறியடித்து கமல்ஹாசனை தாக்கிய அண்ணாமலை.. பின்னணியில் விஷயமே வேறயாமே.. மிரண்ட பாஜக

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: அதிமுக பாஜக மோதலுக்கு இடையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு புதிய தலைவலி ஒன்று ஏற்பட்டு உள்ளது. அந்த தலைவலி.. மக்கள் நீதி மய்யம்.

2024 தேர்தலுக்கான தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துவிட்டது. 2024 லோக்சபா தேர்தலுக்கு புதிய கூட்டணி அமைப்போம் என்றும் அதிமுக கூறிவிட்டது. விரைவில் கூட்டணிக்கான பணிகளை தொடங்குவோம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

Why BJP Annamalai opposing MNM Kamal Haasan all of a sudden in Coimbatore?

வரும் காலங்களில் கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பதற்கான பணிகளை கண்டிப்பாக அதிமுக முன்னெடுக்கும். இன்னொரு பக்கம் திமுக தனது கூட்டணியை உடையாமல் பார்த்துக்கொள்ளும். முக்கியமாக கூட்டணியில் இருக்கும் விசிக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் ஆலோசனைகளை செய்யும்.

இவரக்ளுடன் ஆலோசனை செய்து கூட்டணியை இறுதி செய்யும் வாய்ப்புகள் உள்ளன. இன்னொரு பக்கம் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணையும் வாய்ப்புகளும் உள்ளன. மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக உள்ளது. மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஏற்கனவே காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார்.

அதன்பின் திமுகவிற்கு பல்வேறு இடங்களில் ஆதரவாக பேசி உள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சருடன் நட்பாக உள்ளார். சினிமா ரீதியாக விக்ரம் படத்தில் தொடங்கிய நட்பு அரசியல் ரீதியான நட்பாகவும் மாறி உள்ளது.

இதற்கு இடையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.

அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் தேர்தல் மோதல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. பாஜக சார்பாக இங்கே அண்ணாமலை களமிறக்கப்படலாம் என்பதால்தான் இந்த தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது.

தாக்கும் அண்ணாமலை; இதன் காரணமாக இப்போதே அண்ணாமலை, கமல்ஹாசனை தாக்க தொடங்கி உள்ளார். அதில், கோவையில் பாஜக வென்றால்தான் மக்களை காப்பாற்ற முடியும். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். அவர்கள் வானதி சீனிவாசன் தேர்தல் பணிகளை செய்வதை விரும்பவில்லை.

ஆடல் பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோவை மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா? திமுக சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார். கோவையில் கம்யூனிஸ்ட் எல்லாம் இனி வெல்ல முடியாது. அந்த காலம் முடிந்துவிட்டது.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா? நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பார்த்து பம்முகிறார். கமல்ஹாசனின் தோலை கோவை மக்கள் முழுமையாக உரித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள்., என்று கூறியுள்ளார். கோவையில் கமல் போட்டியிடுவேன் என்று கூறியதும் அதே தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பு உள்ள நிலையில்தான் கமல் ஹாசனை அண்ணாமலை கடுமையாக தாக்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+