ஜனவரி ஒன்று முதல் சிக்கன் விலையும் உயரப்போகுது? கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சொல்வது என்ன?
கோவை: கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்கள் பலர் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள். பொதுவாக இப்படியான சூழலில் சிக்கன் விலை குறைந்துவிடும். முட்டை விலையும் கடுமையாக சரியும். ஆனால் முட்டை விலை பெரிய அளவில் தினமும் உயர்ந்து வருகிறது. சிக்கன் விலை குறையவே இல்லை.. 280 என்கிற அளவில் உள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு முழுவதும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் 1-ந்தேதி முதல் வளர்ப்பு கூலி உயர்வு கேட்டு உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் சிக்கன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அணி மற்றும் தமிழக மாநில விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், கோவை மாவட்டம் அன்னூரில் நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் எம்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநிலம் முழுவதிலும் இருந்து வந்த உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டார்க்ள். பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எம்.மகாலிங்கம் கூறுகையில், 5 ஆயிரம் கோழிகளை வளர்க்க செலவுகள் முன்பைவிட கடுமையாக அதிகரித்து வருகிறது.

40 நாட்களுக்கு ஒரு லோடு தென்னை நார் பரப்ப தேவையான விலை ரூ.8000 ஆக இருந்தது. ஆனால் தற்போது ரூ.24 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. எங்களுக்கு வழக்கமாக வரும் மின்சார கட்டணம் ரூ.2 ஆயிரம் ஆகும். அதன் விலை தற்போது ரூ.6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால் பி.சி.சி. நிறுவனங்கள் கோழி வளர்ப்புக்கான செலவு தொகையை உயர்த்தி வழங்க மறுக்கின்றன.
கோழி வளர்ப்பு கூலியாக கிலோவுக்கு ரூ.20-ம், நாட்டு கோழிக்கு ரூ.25, காடை வளர்ப்புக்கு ஒரு காடைக்கு ரூ.7-ம் வழங்க வேண்டும். கறிக்கோழி பண்ணைகளுக்கு கட்டணமில்லா மின்சாரம் அரசு வழங்க வேண்டும். இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 1-ந்தேதி முதல் கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம். ஏற்கனவே இருக்கும் கோழிகளை விற்பனைக்கு அனுப்பி விட்டு, வளர்ப்பதற்கான கோழிகளை பெற மாட்டோம்" இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் கிலோ கோழி இறைச்சி தேவைப்படுகிறது ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு லட்சம் கிலோ கோழி இறைச்சி தேவைப்படும் நிலையில் பண்ணையாளர்களின் உற்பத்தி நிறுத்த போராட்டம் கோழி இறைச்சி தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன் விலை அதிகரிக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications