இடியாப்ப சிக்கலில் இலங்கை அரசு... அமைச்சரவையை கலைக்க எதிர்க்கட்சிகள் இறுதி எச்சரிக்கை
கொழும்பு : இலங்கையில் ராஜபக்ஷே தலைமையிலான அமைச்சரவையை கலைத்துவிட்டு இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என 11 கட்சிகளின் கூட்டமைப்பு இறுதி எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில், ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்கள் வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசு அவசர நிலையை அறிவித்து இருக்கிறது.

11 கட்சிகளின் கூட்டமைப்பு இறுதி எச்சரிக்கை
தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி வரும் கோத்தபய ராஜபக்ஷே அரசுக்கு மேலும் நெருக்கடி தரும் விதமாக அந்நாட்டின் 11 கட்சிகளின் கூட்டமைப்பு இலங்கை அமைச்சரவையை கலைக்க இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.

ராஜபக்ஷேவுக்கு இருக்கும் இறுதிவழி
இதுகுறித்து இலங்கை தேசிய முன்னணி கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதே, தற்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் அதிபருக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கும் ஒரே வழி. இதன் மூலமாக வன்முறையை நோக்கி செல்லும் இலங்கையை தடுக்க முடியும்." என்றார்இதுகுறித்து இலங்கை தேசிய முன்னணி கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சா செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், "அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதே, தற்போதைய நெருக்கடியாக காலகட்டத்தில் அதிபருக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கும் ஒரே வலி. இதன் மூலமாக வன்முறையை நோக்கி செல்லும் இலங்கையை தடுக்க முடியும்." என்றார்.

நம்பிக்கை இழந்த மக்கள்
இலங்கை அமைச்சர்களை தகுதி அற்றவர்கள் என விமர்சித்த வீரவன்சா, "மக்களுக்கு இலங்கை அமைச்சரவையின் மீதான நம்பிக்கை பறிபோய்விட்டது. ஒன்று அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். அல்லது அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

அனைத்துக் கட்சியினரை அமைச்சராக்குக
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி அனைத்துக் கட்சிகளின் பிரமுகர்களை அமைச்சர்களாக அறிவிப்பதன் மூலம், பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்த இலங்கை படுகுழியில் விழுவதில் இருந்து தடுக்க முடியும்,

வன்முறையை தடுக்க முடியாது
முதலில் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். அதன் பிறகு தேர்தலை நடத்த வேண்டும். அதே போல் மக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உருவாக்க வேண்டும். இலங்கையின் பொருளாதாரம் இப்படியே சென்றுகொண்டு இருந்தால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாது.

துரோகம் செய்த இலங்கை அரசு
இந்த அரசாங்கம் இலங்கை மக்களுக்கு துரோகம் செய்துவிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்திடம் எது சரி என்று சொல்லி புரியவைக்க முயன்றோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி தாழ்த்தவில்லை. என்றார்.
Recommended Video

உணவு, மருந்து இன்றி மக்கள்
அதேபோல், பிவிதுரு ஹெலா உருமயா கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதயா கம்மன்பிலா செய்தியாளர்கள் முன்னிலையில் உரையாற்றுகையில், "5 ஆண்டுகள் இந்த அரசு ஆள வேண்டும் என தேர்ந்தெடுத்த மக்கள் ஒன்றரை ஆண்டுகளிலேயே நம்பிக்கை இழந்துவிட்டனர். தற்போது இலங்கை அரசாங்கம் கடனை அடைக்க தயாராகி வருகிறது. அதேநேரம் இலங்கை மக்கள் மருந்துக்கும் உணவுக்கும், எரிவாயுவுக்கும், மின்சாரத்துக்கும், எரிபொருளுக்கும் தல்லாடி வருகின்றனர்." என்றார்.












Click it and Unblock the Notifications