கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீவிரவாத தாக்குதல்.. 2 முறை எச்சரிக்கை விடுத்தது இந்தியா.. அலட்சியம் காட்டியது இலங்கை

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழும் என இந்தியா இருமுறை எச்சரித்துள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளை உலுக்கும் அளவுக்கு இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 359 பேர் பலியாகிவிட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதற்கு யார் காரணம் என்பது குறித்தும் இலங்கை புலனாய்வு நிறுவனத்தால் சேகரிக்கப்பட்டு வந்தது.

மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு! மீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு!

உறுதி

உறுதி

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு காரணமான 7 பேரின் பெயர்களை இலங்கை புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இந்த சம்பவம் இப்படி நிகழலாம் என ஐஎஸ் தீவிரவாதிகளின் உரையாடல்கள் மூலமும், இது தொடர்பாக இந்தியாவில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும் இந்தியா இரண்டு முறை இலங்கையை எச்சரித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இதன்படி முதல் எச்சரிக்கை கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி இலங்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக இன்னொரு முறை இந்தியா எச்சரித்ததாகவும் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.

இலங்கை

இலங்கை

இதுதொடர்பாக இலங்கை புலனாய்வு பிரிவினரும் இந்தியாவிடம் இருந்து எச்சரிக்கை வந்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்களும் வைக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்க வைப்பது உள்ளிட்டவை தொடர்ந்து வருவதால் இலங்கை மக்கள் இன்னும் பீதியில் உள்ளனர்.

விசாரணை

விசாரணை

10 வாகனங்களில் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டு தீவிரவாதிகள் வலம் வருவதாக இலங்கை புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி சந்தேகப்படும் இடங்களில் இருக்கும் வாகனங்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்த 10 வாகனங்கள் எங்கே இருக்கின்றன என்பது குறித்து புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகீர் தகவல்

பகீர் தகவல்

மேலும் அவர்கள் தொடர் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்ததன் காரணமாக அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முதல் ஆங்காங்கே குண்டுவெடிப்பு நிகழ்வதும் வைத்த குண்டுகளை கண்டுபிடிப்பதுமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இலங்கையில் 160 தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தங்கியுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

புலனாய்வு

புலனாய்வு

கொழும்பு அருகே வெடிகுண்டு தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு இதன் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தற்கொலை படை தாக்குதலில் பெண் ஒருவர் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோடீஸ்வர இளைஞர்களும் படித்த பட்டதாரிகளும் அடக்கம் என புலனாய்வு பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

English summary
India warns Srilanka about terrorist attack on Easter for 2 times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X