உச்சகட்ட டென்ஷன்.. இலங்கைக்கு ராணுவத்தை அனுப்புமா இந்தியா.. தூதரகம் பதில் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக கூறப்படும் தகவல்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்ச குடும்பத்தினரின் தவறான முடிவுகளே காரணம் என எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் பதவி விலகக் கோரி ஒரு மாதமாக தெருமுனை போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் நெருக்கடி நிலையை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிறப்பித்தார்.

போராட்டங்கள்

போராட்டங்கள்

இந்த நிலையில் போராட்டங்களை ஒடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடந்துக் கொண்டனர். இதனால் போராட்டங்கள் ஆங்காங்கே தீவிரமடைந்தன. பிரதமர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என அடம்பிடித்த மகிந்த ராஜபக்ச அப்பதவியிலிருந்து நேற்று முன் தினம் விலகினார்.

மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவல்களை அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர். மேலும் அவர் திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருந்து பொருட்கள்

மருந்து பொருட்கள்

மேலும் இலங்கைக்கு மருந்து பொருட்களுடன் 100க்கும் மேற்பட்ட இந்திய கடற்படையினர் முகாமிட்டுள்ளதாகவும் திருகோணமலையில் மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய கடற்படையினரே பாதுகாப்பு வழங்குவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அது போல் ராஜபக்ச இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Recommended Video

    India-வில் Srilanka அரசியல்வாதிகள் தஞ்சம்? | உண்மை என்ன? | Oneindia Tamil
    இந்திய தூதரகம்

    இந்திய தூதரகம்

    இந்த தகவலை இலங்கைக்கான இந்திய தூதரகம் மறுத்துள்ளது. இதுகுறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரு சில மீடியாக்களும், சமூகவலைதளங்களும் இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் உண்மை இல்லை. இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பவில்லை. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்றே தெள்ளத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதாவது "இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை, பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்" என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+