இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தலையீடு இல்லை- இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுப்பு
கொழும்பு: இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா தலையிட்டுள்ளதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை இலங்கைக்கான இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால் ஜனாதிபதி பதவியை கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரணில் விக்கிரமசிங்கே ,டலஸ் அழகப்பெருமா, அனுரா குமார திசநாயக்க இருந்தனர். இத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே வென்று புதிய ஜனாதிபதியாகி உள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பது என ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதேநேரத்தில் சில தமிழ் எம்.பி.க்கள் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரிப்பதாகவும் கூறியிருந்தன.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் இந்தியாவின் தலையீடு குறித்தும் எழுதியிருந்தன. அந்த ஊடக செய்திகளில் அதாவது, ஜனாதிபதி தேர்வு தொடர்பான விவாதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இரா.சம்பந்தன் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுமந்திரன் எம்.பி பேசுகையில் டலஸ் அழகப்பெருமாவைத்தான் இந்தியா ஆதரிக்கிறது; அதனால்தான் சஜித் பிரேமதாசவும் டலஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்றார். மேலும் இலங்கைக்கான இந்திய தூதரை சுமந்திரன் அந்தக் கூட்டத்திலேயே செல்போனில் அழைத்து இந்தியாவின் நிலைப்பாட்டை நீங்கள் தெரிவிக்க வேண்டும் என பகிரங்கமாகக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை இலங்கை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன.
Recommended Video
இதனை நேற்றே இலங்கைக்கான இந்திய தூதர அதிகாரிகள் மறுத்திருந்தனர். இன்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திட்டவட்டமாக மறுத்து பதிவிட்டுள்ளது. அப்பதிவில், இலங்கை ஜனாதிபதி தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிட்டதாக கூறப்படுவது ஆதாரமற்றது. அதனை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். இது தொடர்பான செய்திகள் அனைத்தும் கற்பனையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications