நடுக்கடலில் பயங்கரம்- இலங்கை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு- கடற்படை தீவிர விசாரணை!
கொழும்பு: இலங்கை கடற்பரப்பில் நடுக்கடலில் அந்நாட்டு மீனவர்கள் மீது வெளிநாட்டு படகில் இருந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. இத்தாக்குதலில் படுகாயம் அடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படை கைது செய்வதும் சிறைகளில் அடைப்பதும் சுட்டுப் படுகொலை செய்வதும் 40 ஆண்டுகளாக நீடிக்கும் துயரம். சில நேரங்களில் தமிழ்நாட்டு கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை இலங்கை கடற்படை வீசி தாக்குதல் நடத்துவதும் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத அளவுக்கு இலங்கை கடற்படை நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த பிரச்சனையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் ஆதங்கம். இது தொடர்பாக அண்மையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டு மீனவர்கள் கைகளில் கையெறி குண்டுகளை கொடுத்து அனுப்புவோம் என கூறியிருந்தார். இது விவாதப் பொருளாகி இருந்தது.
இந்நிலையில் இலங்கையின் காலி கடற்பரப்பில் அந்நாட்டு மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது வெளிநாட்டு படகு ஒன்றின் மீது இலங்கை மீனவர்களின் படகு மோதியது. இதனையடுத்து வெளிநாட்டு படகில் இருந்த நபர்கள், இலங்கை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்தத் தாக்குதலில் தீக்காயமடைந்த மீனவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை கடற்படை விசாரித்து வருகிறது.
காலி கடற்பரப்பில் இலங்கை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியது இந்தோனேசிய மீன்பிடி படகு எனவும் கூறப்படுகிறது. இத்தாக்குதல் இலங்கை மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications