உணவளித்த நபர் மரணம்! முத்தம் கொடுத்து எழுப்பிய குரங்கு.. தேம்பி அழுத மாருதி! நெஞ்சை உலுக்கும் வீடியோ
கொழும்பு: இலங்கையில் மட்டக்களப்பில் தனக்கு அன்றாடம் உணவு வைக்கும் நபர் இறந்ததை அடுத்து அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்ட குரங்கு, அவரை எழுப்புவதற்கு முயற்சித்த காட்சிகள் அங்கிருந்தோரை கலக்கமடைய செய்தது.
மனிதர்களை விட ஐந்தறிவு ஜீவராசிகள் மிகவும் அன்பானவை. உணவு புகட்டி அன்பாக இருக்கும் மனிதர்கள் மீது ஐந்தறிவு ஜீவன்கள் பாசத்துடன் இருக்கும். அவர்களுக்கு ஒரு ஆபத்து என வந்துவிட்டால் தனது உயிரை கொடுத்தும் காப்பாற்றும் பொதுநலவாதிகள் அவை.
அண்மையில் நிறைய செய்திகளை பார்த்துள்ளோம். எஜமானரை கடிக்க வந்த பாம்பை கடித்து உயிர்விட்ட பாசக்கார நாய், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் அருகே சென்ற பாம்பை கடித்துகுதறி உயிரை விட்ட கதையெல்லாம் பார்த்திருக்கிறோம்.

மனிதர்கள்
சக மனிதர்களுக்கு கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் நன்றி என்ற ஒன்று அவர்களில் எத்தனை பேருக்கு இருக்கும் என்பதை தெரியாது. ஆனால் விலங்குகள் அப்படியில்லை, சாலையில் செல்லும் நாய்களுக்கு ஒரே ஒரு நாள் உணவிட்டாலும் அது காலத்திற்கும் நன்றியுணர்ச்சியுடன் இருக்கும். வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகள் எஜமானர் இறந்துவிட்டால் அது கண்ணீர் விட்டு அழும்.

உரிமையாளர்கள்
கூடுமானவரை உரிமையாளர்களுக்கு வரும் ஆபத்தை தன் பக்கம் எடுத்து கொள்ள முயற்சிக்கும். அது முடியாதபட்சத்தில் எஜமானர்கள் இறந்துவிடும் துர்பாக்கிய நிலை அந்த ஐந்தறிவு ஜீவன்களை சொல்லொண்ணாதுயரத்தில் ஆழ்த்திவிடும். இப்படித்தான் இலங்கையில் மட்டக்களப்பில் தனக்கு தினமும் உணவளித்த ஒருவரின் இறப்பை தாங்கிக் கொள்ளாத குரங்கு அவரின் உடல் அருகே நீண்டே நேரம் அமர்ந்து கொண்டு அஞ்சலி செலுத்தியது.

சமூகவலைதளங்கள்
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இறந்தவரின் அருகே சென்று உட்கார்ந்த அந்த குரங்கு அந்த நபரின் கால்களை தொட்டு அந்த குரங்கு வணங்கியது. அங்கு கூடியிருந்தோர் இறந்த நபரை குரங்கு ஏதேனும் செய்துவிட போகிறது என்ற அச்சத்தில் அதை விரட்ட முயற்சித்தனர். ஆனால் அது அந்த நபரை விட்டு எங்கு செல்லவில்லை. அந்த நபரை எழுந்திருக்க வைக்க முயற்சித்தது.மேலும் அந்த நபருக்கு முத்தமிட்டு தேம்பி அழுதது.

சோகம்
அவரை தொட்டு தொட்டு எழுப்பியது. ஆனால் அவர் எழாததால் குரங்கு ஏமாற்றமடைந்து சோகமானது. இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் குரங்கின் பாசத்தை கண்டு கண்ணீர் சிந்தினர். எப்போதாவது அந்த நபர் தமக்கு வந்து உணவு வைப்பார் என்ற எதிர்பார்ப்புடன் அந்த நபருக்கு குரங்கு பிரியாவிடை கொடுத்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications