நான்தான் பிரதமர்.. நானும்தான் பிரதமர்.. இலங்கையில ஒரு அக்கப்போர்!
கொழும்பு: இலங்கை அரசியல் களம் படு சூடாகியுள்ளது. நான் இன்னும் பிரதமர் தான் என்று ரணில் விக்கிரசிங்கே கூறி வருகிறார். மறுபக்கம் புதிதாக பிரதமராகியுள்ள ராஜக்சே சூட்டோடு சூடாக தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் என்று மாற்றியுள்ளார்.
இலங்கை அரசியல் களத்தில் இன்று பெரும் அக்கப்போர் நடந்தேறியது. சீனாவின் தீவிர ஆதரவாளரான ராஜபக்சேவை அதிரடியாக பிரதமராக்கி விட்டார் அதிபர் சிறிசேனா.

இதை இலங்கை மக்களே எதிர்பார்க்கவில்லை. ஒட்டுமொத்த நாடும் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது. சுத்தமாக பெரும்பான்மை பலம் இல்லாத கூட்டணி சிறிசேனா - ராஜபக்சே கூட்டணி. ஆனால் இவர்களை விட அதிக எம்.பிக்களைக் கொண்ட ரணில் விக்கிரசிங்கேவை விரட்டி விட்டது.
பதவியேற்ற கையோடு தனது டிவிட்டர் பக்கத்தை பிரதமர் என்று மாற்றியுள்ளார் ராஜபக்சே. ஆனால் என்ன கொடுமை என்றால் இவரது டிவிட்டர் பெயர் பிரஸ்ராஜபக்சே என்பதுதான். அதாவது பிரசிடென்ட் ராஜபக்சே.
மறுபக்கம் ரணில் விக்கிரசிங்கே தனது டிவிட்டர் பக்கத்தில் இலங்கை பிரதமர் என்றே தொடர்ந்து வைத்துள்ளார். இவர்களின் இந்த பதவி வெறி சண்டையால் இலங்கையே அல்லோகல்லப்பட்டுப் போயுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications