Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கை அதிபர் மாளிகைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள்.. தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

    வெடித்தது போராட்டம்.. இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

    இலங்கை இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக மக்கள் கடந்த ஏப்ரல் 9ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். மக்களின் தொடர் போராட்டம் காரணமாக இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். பின்னர் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இருந்தும் இலங்கையில் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.

    மக்கள் போராட்டம்

    மக்கள் போராட்டம்

    இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக இலங்கையில் இதுவரை நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதனிடையே அதிபருக்கு எதிராக போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் பல்வேறு பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால், கொழும்பு வரும் சாலைகள் மூடப்பட்டும், பெட்ரோல் நிலையங்கள் அடைக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாணவர்கள் போராட்டம்

    மாணவர்கள் போராட்டம்

    இதனிடையே இலங்கை தலைநகர் கொழும்புவில் அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகை மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டு வருகின்றனர். இதுமட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்வலத்தில் பங்கேற்க பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

    துப்பாக்கிச்சூடு - பதற்றம்

    துப்பாக்கிச்சூடு - பதற்றம்

    விளையாட்டு மைதானங்களில், காலி இடங்களில் பொதுமக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் கொழும்புவில் உள்ள இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையை முற்றுகையிட்டவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுவீசி, போராட்டத்தை கலைக்க போலீசார் முயற்சித்து வருகின்றனர். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரும் பங்கேற்றுள்ளனர். மகரகாமா என்ற பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தில் காவல்துறையினரும் பங்கேற்றதால், அசாதாரண சூழல் நிலவுகிறது.

    அதிபர் தப்பியோட்டம்

    அதிபர் தப்பியோட்டம்

    இதனிடையே போராட்டக்காரர்களில் சிலர் அதிபர் மாளிகை உள்ளே புகுந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, அதிபர் மாளிகையிலிருந்து தப்பியோடியுள்ளார். அவர் ராணுவ தலைமையகத்தில் தஞ்சம் புகுந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+