இலங்கை வன்முறை: 8 பேர் பலி- 220 பேர் படுகாயம்; 38 வீடுகள் தீக்கிரை- 47 வாகனங்கள் எரிந்து சாம்பல்!
கொழும்பு: இலங்கையில் நேற்று பிற்பகல் முதல் தொடரும் வன்முறை சம்பவங்களில் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர்; 220 பேர் படுகாயமடைந்துள்ளனர்; 38 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த அமைதி வழிப் போராட்டம் மீது வன்முறை ஏவப்பட்டது. இது பொதுமக்களிடையே இலங்கை முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொந்தளிப்பு இன்னமும் அடங்கவில்லை.
Recommended Video

இலங்கையில் ஜனாதிபதியாக இருக்கும் கோத்தபாய, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீது கொலைவெறியுடன் பொதுமக்கள் இருப்பதையே பல்வேறு சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. மகிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடுகள், ராஜபக்சேக்களின் தந்தையின் கல்லறை, சிலை, பசில் ராஜபக்சேவின் வீடு ஆகியவை தீக்கிரையாக்கப்பட்டும் தகர்க்கப்பட்டும் உள்ளன.
இதேபோல் இலங்கை முழுவதும் இதுவரை நிகழ்ந்த வன்முறைகளால் ஏற்பட்ட சேத விவரங்களை இலங்கை போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதன்படி வன்முறை சம்பவங்களால் மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேல் மாகாணத்தில் 6 பேரும் தென் மாகாணத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தவன்முறை சம்பவங்களில் மொத்தம் 220 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும் 38 வீடுகளும் 47 வாகனங்களும் எரிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 41 வாகனங்களும் 65 வீடுகளும் தீ வைப்பினால் சேதமடைந்துள்ளன என்று இலங்கை போலீசார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இலங்கையில் இதுவரை எரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள் வீடுகள் விவரம்:
ராஜபக்சேக்களின் குடும்ப கல்லறை, தந்தையின் சிலை, பசில் ராஜபக்சே வீடு
சனத் நிஷாந்தவின் வீடு; திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு; குருநாகல் மேயர் மாளிகை; ஜோன்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்; மொரட்டுவை மேயரின் வீடு; அனுஷா பாஸ்குவலின் வீடு; பிரசன்ன ரணதுங்கவின் வீடு; ரமேஷ் பத்திரனவின் வீடு;சாந்த பண்டாரவின் வீடு;ராஜபக்ஷ பெற்றோரின் கல்லறை; நீர்கொழும்பில் உள்ள அவன் கார்டன் ஹோட்டல்; அருந்திகவின் வீடு; கனக ஹேரத்தின் வீடு; காமினி லொகுகேவின் வீடு; காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு; மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்; லான்சாவின்-2 வீடுகள்; வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு;அலி சப்ரியின் வீடு; பந்துல குணவர்தன வீடு; வீரகெட்டிய மெதமுலன வீடு; கேகாலை மஹிபால ஹேரத் ஹவுஸ் ; கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம்; கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் ; விமல் வீரவன்சவின் வீடு; அசோசியேட் சூப்பர் சென்டர் காலி ; சிறிபால கம்லத் வீடு ; கெஹலிய ரபுக்வெல்ல வீடு; ரோஹித அபேகுணவர்தன இல்லம் ; நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் ; காஞ்சனா விஜேசேகர இல்லம் ; துமிந்த திசாநாயக்க வீடு ; ஞானாக்கா வீடு
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications