மருந்துகளும் காலி! மோசமடையும் இலங்கை நிலை... அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மருத்துவர்கள்
கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் கூட இல்லை என்று கூறி மருத்துவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது இது அரசியல் நெருக்கடியாகவும் உருவெடுத்து இருக்கிறது.
உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

போராட்டத்தில் வெடித்த வன்முறை
அதே நேரம் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களும் வன்முறைகளும் வெடித்துள்ளன. கடந்த 31 ஆம் தேதி இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ஷே பதவி விலகக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதனை தொடர்ந்து இலங்கையில் அவசர நிலையும், தலைநகர் கொழும்புவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இலங்கையில் பொருளாதார சூழல் மோசமடைந்து இருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததுடன் தட்டுப்பாடும் ஏற்பட்டு உள்ளது. உணவு மற்றும் எரிபொருட்கள் கிடைக்கவில்லை.

நிறுவனங்கள் மூடல்.. வேலையிழப்பு
பொருளாதார மந்தநிலையால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஏராளமானோருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் எரிபொருட்கள் கிடைக்காததால் போக்குவரத்தும் முடங்கி இருக்கிறது. இதனால் மக்கள் வெளியில் வர முடியாமல் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கின்றனர். மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.

தீவிரமாகும் போராட்டங்கள்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. கடந்த சில 10 ஆண்டுகளில், தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள், தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எரிந்துவிட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி இருக்கின்றனர்.

மருத்துவர்கள் போராட்டம்
இதனிடையே தற்போது இலங்கையில் மருத்துவர்களும் போராட்டத்தை கையில் எடுத்து உள்ளனர். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்துகள் இல்லை என்று கூறி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் தலைநகர் கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனை முன்பாக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை குடிமக்களுக்கு வாழ்வதற்கு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் உரிமை உள்ளதால் மருந்து வாங்குவதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அதேபோல் டி.எச்.அனுராதபுரா, கேகல்லே மருத்துவமனை, தம்ப்ளா மருத்துவமனை முன்பாகவும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications