கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கைக்கு மேலும் 5 லட்சம் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது சீனா

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கைக்கு 2-வது கட்டமாக மேலும் 5 லட்சம் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை சீனா வழங்கி உள்ளது.

இலங்கையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுவாக இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இந்தியா முன்னுரிமை கொடுத்து வந்தது.

Sri Lanka gets second vaccine donation from China

தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதி உச்சத்தில் இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை என கடும் நெருக்கடிகள் உள்ளன.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி தற்போது இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளை சீனா வழங்கி வருகிறது. ஏற்கனவே 6 லட்சம் கொரோனா சைனோபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு சீனா வழங்கியது.

12 வயது முதல் 17 வயது சிறுவர்களுக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்! 12 வயது முதல் 17 வயது சிறுவர்களுக்கு மாடர்னா கொரோனா தடுப்பூசி 100 சதவீதம் பலன்!

இந்நிலையில் மேலும் 5 லட்சம் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசிகளை நேற்று இலங்கைக்கு சீனா வழங்கி இருக்கிறது. அத்துடன் இந்த சைனோபார்ம் தடுப்பூசியை இலங்கையிலேயே உற்பத்தி செய்வதற்கன நடவடிக்கைகளும் கூட மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம்.

English summary
Sri Lanka has received 500,000 doses of Sinopharm coronavirus vaccine donated by China.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X