இதுதான் ஒரே வழி! தொடர்ந்து மோசமாகும் பொருளாதாரம்.. நிதியமைச்சர் எடுத்த முக்கிய முடிவு! மீளுமா இலங்கை
கொழும்பு: இலங்கை பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதால், நிலைமையைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இலங்கை நாட்டில் சுதந்திரம் அடைந்தது முதல் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி என பல்வேறு காரணங்களால் அங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வந்தது.
இப்போது பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நிலைமை இப்போது நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கூட உச்சம் தொட்டுள்ளது.

ராஜபக்ச அரசு
இதன் காரணமாக ராஜபக்ச அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். அங்குள்ள அனைத்து தரப்பு மக்களும் இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு புறம் தொடர்ந்து மோசமடையும் பொருளாதாரம் மறுபுறம் ஓயாமல் நடைபெறும் மக்கள் போராட்டம் என்று ஒட்டுமொத்த இலங்கையிலும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா உதவி
இதனிடையே நிலைமையை மேம்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நாடுகளிடம் உதவி கோரி வருகிறது. ஏற்கனவே, 1 பில்லியன் டாலர் கடனுதவியை இந்தியா அறிவித்தது. அதேபோல எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்க 40 ஆயிரம் டன் டீசலையும் இந்தியா வழங்கியது. இருந்த போதிலும், இலங்கை நாட்டில் நிலைமை மேம்படவில்லை. இதையடுத்து அடுத்தகட்ட பொருளாதார உதவிகளைப் பெற இலங்கைப் பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர்.

நிதியமைச்சர் அமெரிக்கா பயணம்
சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து 4 பில்லியன் டாலர் கடன் பெற இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருளுக்கான தொகை மற்றும் கடனை திரும்பச் செலுத்த இது உதவும். புதிய நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வரும் ஏப்ரல் 19 முதல் 24 வரை கடனுதவியைப் பெற பல்வேறு அமைப்புகளுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

சர்வதேச நிதியம்
சர்வதேச நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முடிக்கும் வரை, கடன் பத்திரங்கள் உள்ளிட்ட வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்தி வைப்பதாகச் சமீபத்தில் அந்நாட்டு நிதி அமைச்சகம் அறிவித்தது. அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களில் இப்போது இலங்கை பிரதிநிதிகள் அமெரிக்கா செல்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் இலங்கை 7 பில்லியன் டாலர் கடனைச் செலுத்த வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் முதல்முறை
1948ஆம் ஆண்டுக்குப் பின்னர், இலங்கை நாட்டால் கடனை திரும்பச் செலுத்த முடியாமல் போயுள்ளது இதுவே முதல்முறையாகும். அமெரிக்கா பயணம் தொடர்பாகத் தொடர்பாக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி கூறுகையில், "இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர எங்களுக்கு உடனடியாக அவசர நிதி தேவை. இந்த நிதியை அவர்கள் விரைவில் எங்களுக்கு அளிக்க வேண்டும்" என்றார்.

பங்குச்சந்தை மூடல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்களும் இலங்கையில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர். இதன் காரணமாக இலங்கை பங்குச் சந்தைகள் தொடர்ச்சியாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனிடையே பங்குகளை விற்கும் முன்பு, பொருளாதார நிலைமை குறித்துத் தெளிவான புரிதலை ஏற்படுத்தும் வகையில் ஒரு வாரத்திற்குப் பங்குச்சந்தையை மூடுவதாக அறிவித்துள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications