கொழும்பு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேருந்து நிலையத்தில் பதுக்கப்பட்டிருந்த 87 டெட்டனேட்டர்கள்.. திக் பிளான்.. இலங்கையில் தொடர் பதற்றம்

இலங்கையில் கொழும்புவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் கொழும்புவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு நிலவி வருகிறது.

ஈஸ்டர் பண்டிகையான நேற்று இலங்கையில் கொடூரமான குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெற்றது. இலங்கையில் நேற்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள், 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 300க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் 450க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

என்ன உத்தரவு

என்ன உத்தரவு

இந்த நிலையில் இலங்கையில் இன்று போலீசார் கொழும்பு முழுக்க சோதனை நடத்தினார்கள். அங்கு தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவில்லை. மீறி வெளியே வரும் மக்களை போலீசார் கடுமையாக விசாரித்து வருகிறார்கள்.

இலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்! இலங்கையை சிதறடித்த நாசகார கும்பல் முதலில் தாக்குதலுக்கு குறி வச்சது தமிழ்நாட்டுக்குத்தானாம்!

கடும் சோதனை

கடும் சோதனை

இதை வைத்து தற்போது கொழும்பு முழுக்க சல்லடை போட்டு சோதனை நடக்கிறது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள், பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் என்று எல்லா இடங்களிலும் கடுமையான சோதனை நடந்து வருகிறது. ராணுவம் இதற்காக களமிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் என்ன

இலங்கையில் என்ன

இந்த சோதனையின் ஒரு கட்டமாக இன்று இலங்கையில் கொழும்புவில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரிய பரபரப்பு நிலவி வருகிறது. பேருந்து ஒன்றில் கீழ் பக்கம் டெட்டனேட்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

டெட்டனேட்டர்களை பறிமுதல்

டெட்டனேட்டர்களை பறிமுதல்

டெட்டனேட்டர்களை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்தனை பாதுகாப்பை மீறி இது எப்படி பேருந்துக்கு அடியில் வைக்கப்பட்டது என்று விசாரித்து வருகிறார்கள்.

English summary
Sri Lankan police found 87 detonators from the main bus stand in Colombo after the Sri Lanka Bomb Blast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X