ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர்.. இலங்கை அதிபர் கோத்தபய வெளியிட்ட அறிக்கை! யாருக்கு அடுத்த வாய்ப்பு?
கொழும்பு : இலங்கையில் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் நியமனம் செய்யப்படுவர் என அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.
இந்த போராட்டமானது கடந்த திங்கள் கிழமை வன்முறையாக வெடித்ததையடுத்து பல இடங்களில் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது, இதனைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவி இருந்து விலகினார்.

பற்றி எரியும் இலங்கை
அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சவும், அவரது குடும்பத்தினரும் ஹெலிகாப்டரில் திரிகோணமலை கடற்படை தளத்துக்கு சென்று அங்கிருந்து தீவு ஒன்றுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிபர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். மல்வானை பகுதியில் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

கோத்தபய ராஜபக்சே
இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் நியமனம் செய்யப்படுவர் என அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். பல நெருக்கடிகளுக்கு இடையேயும் அதிபர் பதவி விட்டுக் கொடுக்காமல் தற்போது வரை வகித்து வரும் கோத்தபய ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிவிப்பில்" இலங்கை நாடாளுமன்றத்தி பெரும்பான்மை நிருபிக்கும் அரசு சார்பில் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவையும் உருவாக்கப்படும்.

புதிய பிரதமர்
வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. புதிய அரசு அமைந்த பின் அதிபருக்கான அதிகாரத்தை குறைத்துக்கொள்ள தயார். இலங்கையில் மக்கள் அமைதியை நிலைநாட்ட வேண்டும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்போம்" என கூறியுள்ளார். இந்நிலையில் இலங்கையில் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என தற்போதே பல யூகங்கள் வெளியாகி வருகின்றன.
Recommended Video

யாருக்கு வாய்ப்பு?
தற்போது நாட்டில் நிலவிவரும் நெருக்கடி நிலைமை களுக்கு மத்தியில் நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை எம் பிக்கள் அடங்கிய குழுவினர் இலங்கையின் புதிய பிரதமராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என மூன்று பேரின் பெயர்களை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவிடம் முன்மொழிந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல் கூறுகின்றன. மேலும் ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications