அன்று தமிழரை அம்மணமாக்கிய சிங்களர் கைகள் இன்று சக சிங்களரை நிர்வாணமாக்கியது-துரத்தும் துயரம்!
கொழும்பு: சமூக வலைதளங்களில் வலம் வரும் சில படங்கள் எத்தனை வலிகளைத்தான் சொல்கின்றன. 1983-ம் ஆண்டு ஜூலை படுகொலைகளின் போது தமிழரை நிர்வாணப்படுத்திய சிங்கள காடையரின் கொடூரம் இன்னமும் தமிழினப் படுகொலைக்கு வரலாற்று சாட்சியாகவே நிற்கிறது.. அதே கோலத்தை இன்று சிங்களரும் சக சிங்களரால் அதே கொழும்பு வீதிகளில் அனுபவிக்க நேரிட்டத்தை துரத்தும் துயரம் என்றுதானே சொல்ல முடியும்.
Recommended Video
இலங்கையின் பூர்வ குடிகள் தமிழர்கள். வட இந்தியாவில் இருந்து குடியேறி பல்கிப் பெருகி ஒரு இனமாக உருமாறியவர்கள் சிங்களர். இலங்கையை ஒற்றை தேசமாக்கிய ஆங்கிலேயர்கள் தமது பிடியில் விட்டுவிலகிய போது சிங்கள பேரினவாதிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் இலங்கையின் பூர்வகுடி தமிழர்கள் இரண்டாம்தர மக்களாக்கப்பட்டனர்.

தமிழினப் படுகொலை
இலங்கை தமிழர்கள் கடந்த 75 ஆண்டுகளாக அனுபவித்து வரும் கொடுமைகளும் துயரங்களும் ஓய்ந்தபாடில்லை. அகிம்சை போராட்டமும் ஆயுதப் போராட்டமும் தமிழருக்கு விடியலைத் தராமலேயே போய்விட்டன. பல லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் கதி என்னவானது என தெரியாமலே தமிழர் குடும்பங்கள் தத்தளித்துக் கிடக்கின்றன.

சீராட்டிய சிங்களம்
அறமும் நியாயமும் பேசுகிற எந்த சர்வதேச மன்றமும் தமிழரின் நியாயக் குரலை செவிமடுத்து கேட்கவே இல்லை.. இத்தனையும் பார்த்து சிங்கள தேசம் சிலிர்த்து கொண்டே கொட்டமடித்தது. இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சேக்களுக்கு சிம்மாசனங்களை சிங்கள தேசம் அள்ளித் தந்தது. அண்ணன் மகிந்த ராஜபக்சேவை ஜனாதிபதியாக பிரதமராக்கி கொண்டாடியது சிங்களம். தம்பி கோத்தபாயவையும் ஜனாதிபதி அரியாசனத்தில் அமரச்செய்தது சிங்களம்.

ராஜபக்சேக்கள் விரட்டியடிப்பு
ஆனால் அடிவயிறு பற்றி எரிய, அடுத்த வேளைக்கு சோற்றுக்கும் அல்லபட்டு அவமதிப்பட்டு நடுத்தெருவுக்கு சிங்கள மக்கள் வந்தபோதுதான் ராஜபக்சேக்களின் கோரமுகமும் அரச பயங்கரவாதத்தின் அர்த்த முகமும் உணரப்பட்டது. சிம்மாசனங்களை சீதனமாக ராஜபக்சேக்களுக்கு கொடுத்த சிங்களர்தான் இப்போது மகிந்த ராஜபக்சேவின் நாற்காலியை நடுத்தருவில் வைத்து பிடுங்கிவிட்டனர். எந்த நிமிடத்திலும் தம்பி கோத்தபாயவின் செங்கோல் காலிமுகத்திடலில் உள்ள ஏரிக்குள் வீசி எறியப்படலாம்.

பகிரப்படும் அந்த படம்
இந்த தருணத்தில் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் ராஜபக்சேக்கள் கும்பலால் ஏவிவிடப்பட்ட சிங்கள காடையர்கள், பொதுமக்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிப் போயினர். இதன் உச்சமாக சிக்கிய ராஜபக்சே கும்பல் தலைவன்கள் நடுத்தெருவில் அரைநிர்வாணமாக அலையவிடப்பட்டனர். இந்த படங்களையும் 1983 ஜூலை படுகொலைகளின் போது கொழும்பு தெருக்களில் தமிழர்கள் நிர்வாணமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட படங்களையும் ஒப்பீட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தமிழர் தம்மை வதைத்த துயரம் துரத்துகிறது சிங்கள தேசத்தையும்!












Click it and Unblock the Notifications