"இலங்கையை மீட்டெடுக்க ஒருவழிதான் இருக்கிறது, இல்லையென்றால்".. உருக்கமாக பேசிய ரணில்!
கொழும்பு: பொருளாதார நெருக்கடி எனும் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கையை மீட்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியத்தின் (IMF) ஆதரவை கோருவதை தவிர நமக்கு வேறு வழியில்லை எனக் கூறிய ரணில் விக்ரமசிங்கே, இது நடக்காவிட்டால் இனி நம்மால் எழுந்து கூட நிற்க முடியாது எனவும் தெரிவித்தார்.
இலங்கையை மீண்டும் மீட்டெடுத்தே தீருவேன் என சபதமிட்டு அதிபரான ரணில் விக்ரமசிங்கே, இவ்வாறு நம்பிக்கையற்ற வார்த்தைகளை பேசுவது இதுவே முதன்முறையாகும்.

நிலைக்குலைந்த இலங்கை
சிறிய நாடாக இருந்தாலும் தன்னிறைவு கொண்ட நாடு என அறியப்பட்ட இலங்கை, தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. தவறான பொருளாதாரக் கொள்கை, வரைமுறையின்றி கடன் வாங்கியது, கொரோனா ஊரடங்கு போன்ற காரணங்களால் இலங்கை இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பஞ்சத்தால் அங்கு பெரும் உள்நாட்டு கலவரம் மூண்டு, அரசப் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பம் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பியோடியது.

கைவிட்ட நாடுகள்..
இதையடுத்து, அரசாங்கமே இல்லாத நாடாக மாறிய இலங்கையை வழிநடத்த, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எப்படியாவது இலங்கை மீட்டெடுத்தே தீருவேன் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ரணில். ஆனால், தான் நினைத்தது போல இலங்கையை மீட்டெடுப்பது சாதாரண காரியமல்ல என்பதை சில மாதங்களிலேயே அவர் உணர்ந்தார். ஏனெனில், ஏற்கனவே கடன் சுமையிலும், திவாலாகும் நிலைமையிலும் இருக்கும் இலங்கைக்கு மேலும் கடன் கொடுக்க எந்த நாடுகளும் தயாராக இல்லை. ஆனால் இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இலங்கைக்கு நிதியுதவி அளித்து வருகின்றன.

"இலங்கை நிலைமை இன்னும் மோசமாகும்"
இந்நிலையில், கொழும்பில் நேற்று நடைபெற்ற வர்த்தக யூனியன்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் ரணில் விக்ரமிங்கே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது: இலங்கை சில ஆண்டுகளுக்கு முன்பு அனுபவித்து வந்த வசதிகளும், வளங்களும் ஒன்றுமில்லாமல் போய்விட்டன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் பொருளாதார நெருக்கடியால் துவண்டு கிடக்கின்றன. பொருளாதார நெருக்கடியின் முழு பின்விளைவுகளையும் இப்போதுதான் சந்திக்க தொடங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இந்த நிலைமை மேலும் மோசமாகவே இருக்கும்.

"ஒரே ஒரு வழிதான் இருக்கிறது"
இந்த சூழ்நிலையில், இலங்கை எப்படி பொருளாதார நெருக்கடியில் சிக்கியது; எந்தெந்த விஷயங்களை தவறாக கையாண்டோம் என்பது பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. நடந்தது நடந்துவிட்டது. இனி அதில் இருந்து மீண்டெழுவது குறித்துதான் பேச வேண்டும். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையை மீட்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. சர்வேதச நிதியத்திடம் உதவி கோருவது தான் அது. அதுவும் நடக்கவில்லை எனில், இலங்கை மீள முடியாது. அதேபோல, கடன் மறுசீரமைப்பு திட்டங்களையும் உடனடியாக நாம் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications