For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சர்ச்சை ‘சக்தி’ பள்ளி! பல மாணவிகள் கொலை! 17 வருஷத்துக்கு முன்னாடியே சொன்னோம்..பகீர் கிளப்பும் சிபிஐ!

Google Oneindia Tamil News

திருப்பத்தூர் : 17 வருடங்களுக்கு முன்பே கள்ளக்குறிச்சியில் இயங்கும் தனியார் பள்ளியில் நடைபெற்ற பல கொலைகளைப் பற்றி கூறியுள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் 23வது மாநாட்டில் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள தனியார் வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் 23வது மாநாடு நடைபெற்றது.

உங்க பிள்ளைங்க மாதிரி பாத்துக்கனும்! ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! உங்க பிள்ளைங்க மாதிரி பாத்துக்கனும்! ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!

சிபிஐ முத்தரசன்

சிபிஐ முத்தரசன்

இதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்," கள்ளக்குறிச்சியில் இருக்கும் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஸ்ரீமதி என்கிற பெண் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறது. ஆனால் பெற்றோர்களும் மற்றவர்களும் இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் நடை பெற்று இருக்கிறது.

பள்ளி நிர்வாகம்

பள்ளி நிர்வாகம்

இந்த சம்பவத்திற்கு முழு காரணம் பள்ளி நிர்வாகம் தான் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 17 வருடங்களுக்கு முன்பே 25ஆம் ஆண்டு இந்த பள்ளியில் என்னென்ன சம்பவங்கள் நடைபெறுகிறது என்பதை பட்டியலிட்டு எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்பதையும் பட்டியலிட்டு இன்னும் எத்தனை பேரை இந்த பள்ளி காவுவாங்கும் என்பதை குறிப்பிட்டு துண்டு பிரசாரங்களை விநியோகித்து பள்ளியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தொடர்ச்சியாக கொலைகள்

தொடர்ச்சியாக கொலைகள்

அது இன்று நூற்றுக்கு நூறு சரி என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. ஒரு மாணவி மட்டுமல்ல பல மாணவிகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். அங்கு தொடர்ச்சியாக கொலைகள் தான் நடந்து கொண்டிருக்கிறது. நிர்வாகம் விஷம் குடித்து விட்டார்கள். தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தான் கூறும். ஆனால் அங்கு நடந்த வன்முறையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை. நல்லவேளை தூத்துக்குடி சம்பவத்தை போல துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை.

Recommended Video

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி எனக்கூறி பகிரப்படும் 2 புதிய CCTV காட்சிகள் உண்மை என்ன?
    உளவு பிரிவு

    உளவு பிரிவு

    அப்படி நடந்திருந்தால் அது இன்னும் பல உயிர்களை பறித்திருக்கும். அதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெருமைப்படுகிறது காவல்துறை இந்த விஷயத்தில் மிக கவனமாக கையாண்டு கூட்டத்தை கலைத்திருக்கிறது.காவல்துறையின் உளவு பிரிவு இன்னும் கவனமாக செயல்பட்டு இருக்க வேண்டும். அரசு மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை மாற்றி இருக்கிறது உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க அரசு செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்.

    English summary
    State Secretary Mutharasan said at the 23rd Congress of the Combined Vellore District of the Communist Party of India that we have told about the many murders that took place in a private school operating in Kallakurichi 17 years ago.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X