மக்கள் குறைதீர் கூட்டத்தில்..செல்போனில் ஹாயாக சமையல் வீடியோ பார்த்த அரசு அதிகாரி.. மக்கள் அதிர்ச்சி!
கடலூர்: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் பெண் அதிகாரி செல்போனில் சமையல் வீடியோக்களை பார்த்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படாமல் இருந்தது.
மாவட்ட கலெக்டர் அலுவலக வாயில் முன்பு வைக்கப்பட்ட புகார் பெட்டியில் மனுக்கள் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் இன்று நடைபெற்றது.

அதிகாரிகள் அலட்சியம்
பொதுமக்கள் தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக வழங்கி கொண்டு இருந்த நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற அலுவலர்கள் சிலர் செல்போன்களில் உரையாடிக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பார்த்துக் கொண்டும் இருந்தனர்.

சமையல் வீடியோ
இதில் ஆதி திராவிட நலத்துறை அதிகாரி சுமதி என்பவர் தனது செல்போனில் சமையல் செய்யும் வீடியோக்களை பார்த்து ரசித்துகொண்டிருந்தார். பல மாதங்கள் கழித்து நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தியின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மற்றொரு சம்பவம்
அம்பத்தூர் பானு நகரை சேர்ந்தவர் ரோஸ்மேரி(72). இவரது கணவர் சேவியர் இறந்துவிட்டார் இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். ரோஸ்மேரி தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு தினமும் மகன்கள் மூன்று வேளை சாப்பாடு கொடுத்து வந்துள்ளனர். இதற்கிடையில், ரோஸ்மேரி தனது மகளிடம், நான் எல்லோருக்கும் சுமையாக இருக்கிறேன் என கடந்த சில தினங்களாக அழுது புலம்பியுள்ளார்.

மூதாட்டி
இந்நிலையில் நேற்று மதியம் ரோஸ்மேரி வீட்டு கதவை உட்புறமாக பூட்டி கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். இதனை பார்த்த உறவினர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அங்கு ரோஸ்மேரி உடல் கருகி இறந்து கிடந்தார். தகவலறிந்து, அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications