சிதம்பரம் நடராஜர் கோயிலில் சர்ச்சை: உயர் ரக கார் உள்ளே சென்றது எப்படி? - பொதுமக்கள் கேள்வி
உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில் உள்ளே சென்ற சொகுசு கார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரை உள்ளே விட்ட தீட்சிதர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் காலணிகளை எடுத்து செல்ல தடை விதித்துள்ள தீட்சிதர்கள், உயர் ரக காரை உள்ளே அனுமதித்தது எப்படி என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Recommended Video
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிற்றம்பல மேடையில் யாரும் ஏறக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் மற்றும் சமூக, தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடராஜர் கோவிலில் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறி நான்கு நபர்கள் TN-31 BJ-3413 MARUTI SUZUKI என்ற எண்ணுள்ள காரில் ஆலயத்தின் உள்ளே முக்கிய நுழைவாயிலான 21 படிக்கட்டு அருகே காரை நிறுத்தி வைத்தனர். அனைவரும் காலணிகளை காரிலேயே விட்டு சென்றுள்ளனர்.
இதனை கண்ட பொதுமக்கள் கோவில் தீட்சிதர்களிடம் கோவில் உள்ளே வரை சொகுசு காரை யார் அனுமதித்தது என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
சில நாட்கள் முன்பு ஆலய தரிசனத்திற்காக வந்திருந்த புதுச்சேரி ஆளுநர் மற்றும் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் போன்றவர்கள் கூட தங்களின் வாகனங்களை சிதம்பரம் கீழ வீதியிலேயே நிறுத்திவிட்டு நடந்து செல்லவே தீட்சிதர்களால் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் தற்போது தீட்சதர்கள் பணம் பெற்றுக்கொண்டு இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவும் அரசு மற்றும் இந்து அறநிலை துறையும் இதுபோன்ற அத்துமீறல்களை எவ்வளவு காலம் அனுமதிக்கும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
செல்வரத்தினம் என்ற தீட்சிதர், செல்வந்தர் ஒருவரை உயர் ரக காரில், சுவாமி செல்லும் பாதை வழியே வர அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications