அரசு ஆஸ்பத்திரியில் லாவண்யா செய்த பகீர் காரியம்.. பதறிப்போன கடலூர்.. 3மணி நேரத்தில் செம்ம திருப்பம்!
கடலூர்: கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மூன்றே மணி நேரத்தில் புதுச்சேரி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் போலீசார் மீட்டனர். குழந்தையை கடத்திய புதுச்சேரியை சேர்ந்த பெண்ணை போலிசார் கைது விசாரித்து வருகிறார்கள்.
Recommended Video
கடலூர் மாவட்டம் பண்ருட்டி விசூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இந்த தம்பதியினருக்கு கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் நேற்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது, அந்த குழந்தை இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய் உள்ளது,
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

குழந்தை கடத்தல்
அப்போது பெண் ஒருவர் அந்த குழந்தையை எடுத்து செல்வது பதிவாகி இருந்ததை அடுத்து அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் ஆகியயோரிடம் விசாரணை நடத்தியதில் அந்த பெண் குழந்தையுடன் புதுச்சேரி பேருந்தில் ஏறி சென்றதை உறுதி படுத்தினர்.

குழந்தை கண்டுபிடிப்பு
இதை அடுத்து புதுச்சேரி போலிசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் புதுச்சேரி பேருந்து நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர், பின்பு கடலூர் போலீசார் புதுச்சேரி போலிஸார் உதவியுடன் குழந்தையை கடத்திய பெண் புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இருப்பது உறுதி செய்தனர்.

சிக்கிய லாவண்யா
இந்த தகவலை அடுத்து அங்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். போலீசார் மருத்துவமனை இரண்டாவது மாடியில் அந்த பெண்னை கடத்தப்பட்ட குழந்தையுடன் கையும் களவுமாக பிடித்தனர். குழந்தையை மீட்டு அந்த பெண்னை கைது செய்து கடலூர் அழைத்து சென்றனர்.

போலீசார் விசாரணை
மேலும் முதற்கட்ட விசாரணையில் குழந்தையை கடத்தியது புதுச்சேரி பன்னித்திட்டு பகுதியை சேர்ந்த லாவண்யா என்பதும் அவர் எதற்காக கடத்தினார் என்பது குறித்தும் போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூரில் திருடப்பட்ட குழந்தை மூன்றே மணி நேரத்தில் இருமாநில போலீசாரும் சேர்ந்து மீட்டுள்ளன.
-
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை












Click it and Unblock the Notifications