"உன் புருஷனுடன் நெருக்கம்.. 3 முறை கர்ப்பம்".. பதறாமல் சொன்ன அனு.. தூக்கில் தொங்கிய ஷோபனா!

கடலூரில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதில் 3 பேர் கைதாகி உள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கடலூர்: "உன் புருஷனால் 3 முறை கர்ப்பம் ஆனேன்.. அவருக்கு சிக்கன் சமைச்சு போட்டேன்" என்று கள்ளக்காதலி அனு சொல்லவும் பதறி போய்விட்டார் இளம்மனைவி ஷோபனா... வரதட்சணை கொடுமையில் சிக்கி உள்ள நிலையில், தன் கணவனுக்கு ஏற்கனவே அனு என்ற பெண்ணுடன் உறவு என்பதை தெரிந்ததும், ஷோபனா தற்கொலையே செய்து கொண்டார்.. "என் உடம்பை அப்பாவுக்கு பக்கத்துலயே புதைச்சிடுங்க..ம்மா" என்ற ஷோபனாவின் கடைசி வீடியோ தொடர்ந்து மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ளது எருமனுார் என்ற கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.. சென்னையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 24 வயதாகிறது. இவருக்கு கல்யாணம் ஆகி இரண்டரை வருடமாகிறது.. மனைவி பெயர் ஷோபனா.. ஒன்றரை வயதில் விஷோத் என்ற குழந்தை இருக்கிறான்.

ஷோபனா கல்யாணத்துக்கு 50 பவுன் தங்க நகை, 2 லட்சம் ரொக்கப் பணம், சீர்வரிசை என வீட்டில் சீர்வரிசை செய்தும், இன்னும் நிறைய பணம், நகைகள் வேண்டும் என்று கேட்டு ஷோபனாவை அடிக்கடி மாமியார் வீட்டில் துன்புறுத்தி வந்துள்ளார்.

ஷோபனா

ஷோபனா

இதை தவிர, விஜயகுமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதனால் எதையாவது சாக்கு சொல்லி ஷோபனாவை விரட்டி விடுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினமும் தம்பதிக்குள் பிரச்சனை வெடித்துள்ளது.. அதனால், மனம் உடைந்த ஷோபனா தன் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீடியோ

வீடியோ

தற்கொலைக்கு முன்பு ஷோபனாவின் வீடியோ சிக்கியது.. சேலையை கழுத்தில் கட்டி தொங்கவிட்டபடியே அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். "அம்மா என்னை மன்னிச்சிடுங்க.. வரதட்சணை கேட்டு கணவர், மாமனார், மாமியார் 3 பேரும் கதவை பூட்டிட்டு என்னை அடிக்கிறாங்க.. அந்த பெண்ணை இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வர போறாங்க.. அதனாலதான் என்னை கொடுமைப்படுத்துகின்றனர். என் பையனை பார்த்துக்கோ.. உன்னை நம்பி தான் அவனவிட்டுட்டு போறேன்..

தற்கொலை

தற்கொலை

என்னை காப்பாத்தினது போல, எப்படியாவது அவனையும் காப்பாத்திடு.. என்னால உயிர் வாழ முடியல.. என் உடலை அப்பாவை புதைச்சதுக்கு பக்கத்திலேயே புதைச்சிடு.. அப்பா ஆசைப்பட்டது போல் என் உடலையும் உடல் உறுப்பு தானத்திற்கு தந்துடுங்க.. என் சாவுக்கு காரணமானவர்களை சும்மா விடாதீங்க.." என்று அழுது கொண்டே பேசியிருந்தார்.. அவருக்கு பக்கத்திலேயே குழந்தை தூங்கி கொண்டிருக்கிறான்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. போலீசார் இதை பற்றி விசாரணையை துரிதமாகவே ஆரம்பித்தனர்.. அதில், விஜயகுமார் பற்றின மொத்த விஷயத்தையும் போலீசார் கறந்து விட்டனர்.. ஒர்க் பிரம் ஹோமில் இருப்பதாக சொல்லிதான் சென்னையில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார்... ஆனால் அந்த வேலையையும் ஒழுங்ககா செய்யவில்லையாம்.. அதனால் வேலையை விடே இவரை தூக்கிவிட்டார்களாம்.

அனு

அனு

மேலும் இவரது லவ் மேட்டரும் வெளிவந்துள்ளது.. கல்யாணத்துக்கு முன்பிருந்தே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.. அவர் ஈரோட்டை சேர்ந்தவராம்.. பெயர் அனு.. காதல் என்ற பெயரில் ஏகப்பட்ட சேட்டைகளை இவர்கள் செய்துள்ளனர்.,. விஜயகுமாருக்கு ஆசை ஆசையாக சிக்கன் சமைத்து போட்டுள்ளார்.. 3 முறை அனு கர்ப்பமும் ஆனாராம்.

பழி வாங்கினார்

பழி வாங்கினார்

அடிக்கடி பணமும் விஜயகுமாரிடம் நிறைய கேட்டு பெற்றிருக்கிறார் அனு.. ஒரு கட்டத்தில் அனு கேட்ட பணத்தை விஜயகுமாரால் தர முடியவில்லை.. சில இதனால் ஆத்திரம் அடைந்த அனு, விஜயகுமாரை பழி வாங்க நினைத்தார்.. அதற்காக அப்பாவி பெண் ஷோபனாவிடம் வந்து நடந்ததை எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். 3 முறை கர்ப்பம் என்பதை கேட்டதும் ஷோபனாவால் தாங்கவே முடியவில்லை.

வரதட்சணை

வரதட்சணை

இதற்கு பிறகுதான் தம்பதிக்குள் விவகாரம் வெடித்துள்ளது.. மனசு பொறுக்க முடியாமல் கணவனிடம் இதை ஷோபானா கேட்கவும்தான், வரதட்சணை என்ற பிரச்சனையை ஆரம்பித்துள்ளார் விஜயகுமார். கடைசியில் இவர்கள் தொல்லை பொறுக்க முடியாமல் தற்கொலையே செய்து கொண்டார்.

அனு மீது புகார்

அனு மீது புகார்

தற்கொலைக்கு தூண்டியதாக விஜயகுமார், மாமனார், மாமியார் என 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.. ஆனால், இது எல்லாத்துக்கும் காரணம் அனுதான் என்றும், ஷோபனாவுக்கு மனக்குழப்பத்தை தந்ததும் அவர்தான், அதனால் அனுவையும் கைது செய்யுங்கள் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. கடலூரில் இது சம்பந்தமான பரபரப்பு இன்னும் அடங்கவே இல்லை.. ஆனால் அனுவின் கடைசி கண்ணீர் முகத்தை கண்டு மக்கள் கலங்கிவிட்டனர்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+